ரேவதி 80 மற்றும் 90 களில் தென்னிந்திய சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகை. உண்மையான பெயர் ஆஷா. அவர் கேரளாவைச் சேர்ந்தவர். நடிகை ரேவதி 1981 ஆம் ஆண்டு மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல மொழி படங்களில் தோன்றினார். அது தவிர, நடிகை ரேவதி இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களையும் இயக்குகிறார். நடிகை ரேவதி 1988 ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு சில காலம் அவர்களின் படங்களில் தோன்றவில்லை. தம்பதியினர் குழந்தைகள் இல்லாததால் 27 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று உள்ளார்கள் என்றும் பேச்சுகள் அடிபட்டது. பின்னர் இந்த ஜோடி 2002 இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேவதி தனது 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். நான் 20 வயதில் திருமணம் செய்து கொண்டேன். நான் இவ்வளவு சீக்கிரம் செய்திருக்கக் கூடாது என்று என்று பின்னால் தான் வருத்தப்பட்டேன். அப்போதுதான் ‘புன்னகை மன்னன்’ திரைப்படம் வந்தது. இன்னும் சில நல்ல படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்திருக்கலாம் என்று அதற்கு பின்னர் தான் உணர்ந்தேன்
ரேவதி 2018 இல் 5 வயது மகள் இருப்பதாக அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 52. விவாகரத்துக்குப் பிறகு பின் 47 வயதில் ரேவதி குழந்தையை பெற்று உள்ளார். நாங்கள் தனித்தனியாக வாழ்கிறோம். எனக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுடைய பெயர் மாகி, பெண்கள் தாய்மையை அடையும் போது மட்டுமே போது தான் முழுமை அடைகிறாள். பல வருடங்களாக ஏங்கி இருக்கிறேன். அதோடு நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன். பின் நான் பெண் குழந்தையை பெற்றெடுத்தேன் என்று கூறி இருந்தார்.