25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
suntan
முகப் பராமரிப்பு

பெண்களே வெயிலால் உங்க சருமம் கருமையாகாம இருக்கணுமா?

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், தொடக்கத்திலேயே வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாக சூரியனின் புறஊதாக் கதிர்கள் சருமத்தை மோசமாக பாதிக்கக்கூடியது. இந்த புறஊதாக் கதிர்கள் சருமத்தின் நிறத்தை கருமையாக்குவதோடு மட்டுமின்றி, சரும புற்றுநோயை உண்டாக்கும் அளவில் மோசமானது. இந்த புறஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்கு கடைகளில் ஏராளமான சன் ஸ்க்ரீன் லோஷன்கள் விற்கப்படுகின்றன.

கெமிக்கல் நிறைந்த சன் ஸ்க்ரீன் லோஷன்களை சருமத்திற்கு பயன்படுத்தும் அதே வேளையில் இயற்கை வழிகளையும் மேற்கொண்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதேடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். சரி, சூரியனால் சருமம் எப்படி கருமையாகிறது தெரியுமா? சூரிய கதிர்கள் சருமத்தில் படும் போது, சருமமானது புறஊதாக் கதிர்களை உறிஞ்சுவதற்கு அதிக மெலனினை வெளியிடுகிறது. இதன் விளைவாகவே வெயிலில் சுற்றினால் சருமம் கருமையாகிறது.

 

சரி, இப்போது வெயிலால் சருமம் கருமையாவதைத் தடுக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

முட்டைக்கோஸ்

பச்சை இலைக் காய்கறிகள் இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும். அதற்கு முட்டைக்கோஸ் இலைகளை அரை மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் அந்த இலைகளை சருமத்தின் மீது தினமும் பதினைந்து நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரு சிறப்பான மாற்றத்தைக் காணலாம்.

தயிர்

வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், சருமத்தில் தயிரைத் தடவினால், சருமத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும். அதற்கு குளிர்ச்சியான தயிரை வெயில் படும் இடங்களான முகம், கை மற்றும் கால்களில் தடவ வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாலே ஒரு நல்ல பலன் தெரியும்.

கற்றாழை

கற்றாழை சருமத்தில் உள்ள மெலனின் அளவைக் கட்டுப்படுத்தி, சரும கருமையைக் குறைக்க பெரிதும் உதவும் ஒரு அற்புதமான பொருள். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்தில் தடவி ஊற வைத்து வந்தால், சருமத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி, சருமம் பளிச்சென்று பொலிவோடும் பட்டுப்போன்றும் இருக்கும்.

சுரைக்காய் சாறு

சுரைக்காய் சாறு வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்கும் திறன் கொண்டது. அதற்கு சுரைக்காயின் சாற்றினை சருமத்தில் ஒரு நாளைக்கு 3-4 முறை தடவி ஊற வைத்து கழுவி வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கருமை நீங்குவதை நன்கு காணலாம்.

சிவப்பு மைசூர் பருப்பு

சிவப்பு மைசூர் பருப்பு சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது. ஒரு டேபிள் பூன் சிவப்பு மைசூர் பருப்பை ஊற வைத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் சம அளவில் தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை சருமத்தில் தடவி குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, சருமத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்தால், இரண்டே நாட்களில் ஒருநல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.

Related posts

இதோ எளிய நிவாரணம்! உங்க முகத்துல அசிங்கமா சுருக்கம் இருக்கா? இத செஞ்சா, சுருக்கம் இருந்த இடம் தெரியாமல் போயிடும்…

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு இளமை தரும் உப்பு, சீனி, தவிடு முயன்று பாருங்கள் !

nathan

சரும பிரச்சனைகளை போக்க சில வழிமுறைகள்……

nathan

இதோ பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில டிப்ஸ்…!

nathan

வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்…..

sangika

முகத்திற்கு முத்தான சில யோசனைகள்

nathan

மேக்கப்பை எளிதாக அகற்ற பாதாம் எண்ணெய் பயன்படுத்துங்க!

nathan

முகப்பொலிவு அதிகரிக்க வார இறுதி நாட்களில் இந்த பழங்களைக் கொண்டு மாஸ்க் போடுங்க…

nathan

வாரம் ஒருமுறை இந்த மாஸ்க்கை போட்டால், முக சுருக்கங்கள் மாயமாய் மறையும் என தெரியுமா!

nathan