25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
thinhair
தலைமுடி சிகிச்சை

பெண்களே எலி வால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா?

உடல் பருமனுக்கு அடுத்தபடியாக பலரும் அதிகம் வருத்தம் கொள்ளும் ஒரு பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வது பற்றியதாகவே இருக்கும். இன்றைய நவீன காலத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் உடலின் அன்றாட செயல்பாடுகளுக்கு தேவையான சத்துக்கள் கூட கிடைப்பதில்லை. ஒருவரது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் போனால், அது உடலுறுப்புக்களின் செயல்பாட்டைப் பாதித்து ஆரோக்கியத்தைக் கெடுப்பதோடு, தலைமுடியின் ஆரோக்கியத்தையும் கெடுத்து, தலைமுடியை அதிகம் உதிர வைக்கிறது.

அழகு என்று வரும் போது அதில் தலைமுடியும் முக்கிய இடம் பெறுகிறது. அத்தகைய தலைமுடி ஆரோக்கியமாக இல்லாத போது, அது உதிர ஆரம்பிக்கிறது. தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்து என்றால் அது புரோட்டீன். சொல்லப்போனால் புரோட்டீனால் ஆனது தான் தலைமுடி. ஆனால் நாம் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புக்கள் மற்றும் மாசுபாடு போன்றவை புரோட்டீன் அல்லது கெராட்டினை உடைத்து, தலைமுடியில் பாதிப்பை உண்டாக்கி, தலைமுடியை உதிரச் செய்கின்றன.

 

ஆரம்பத்திலேயே தலைமுடி உதிர்விற்கு தீர்வு காண முயற்சித்தால், முடி எலி வால் போன்று அசிங்கமாக காட்சியளிப்பதைத் தடுக்கலாம். இக்கட்டுரையில் ஒல்லியாக அசிங்கமாக இருக்கும் தலைமுடியை வலுவாக்கி அடர்த்தியாக வளர உதவும் சில ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைத் தவறாமல் தலைக்கு பயன்படுத்தி வந்தால், நிச்சயம் முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

 

தேங்காய் பால்

தேங்காய் பாலில் வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை உள்ளன. இது நல்ல கண்டிஷனராக இருப்பதோடு மட்டுமின்றி, தலைமுடிக்கான ஒரு நல்ல புரோட்டீன் சிகிச்சையாகவும் இருக்கும். அதோடு இது பொடுகுத் தொல்லையில் இருந்தும் விடுவிக்க உதவும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு கப் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும். பின் அதை வெதுவெதுப்பாக சூடேற்றி ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளியுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், தலைமுடிக்கு தேவையான சத்து கிடைத்து முடி நன்கு அடர்த்தியாக வளரும். முக்கியமாக தேங்காய் பாலை அதிகமாக சூடேற்றிவிட வேண்டாம்.

நெல்லிக்காய், தேங்காய் எண்ணெய், சீகைக்காய் பவுடர்

ஆம்லா என்று அழைக்கப்படும் நெல்லிக்காய், வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ப்ளேவோனாய்டுகள் அதிகம் நிறைந்த பழம். நெல்லிக்காய் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தலைமுடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கக்கூடியது. தேங்காய் எண்ணெய் தலைமுடியை ஈரப்பதமாக்குகிறது. அதே சமயம் சீகைக்காய் தலைமுடியை வேரில் இருந்து வலுவாக்குகிறது.

பயன்படுத்தும் முறை:

1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாறு, 1 டேபிள் ஸ்பூன் சீகைக்காய் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மயோனைஸ், முட்டை

மயோனைஸ் மற்றும் முட்டை இரண்டிலுமே புரோட்டீன் ஏராளமாக நிறைந்துள்ளது. இது தலைமுடியின் அமைப்பை மாற்றுவதோடு, தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, தலைமுடியை வலுவாக்கி, அடர்த்தியாக வளரச் செய்கிறது.

பயன்படுத்தும் முறை:

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் மயோனைஸை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவி குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்ய முடிக்கு தேவையான புரோட்டீன் கிடைத்து, முடி அடர்த்தியாக வளரும்.

தயிர், எலுமிச்சை சாறு, தேன்

எலுமிச்சை சாறு பொடுகுத் தொல்லை பிரச்சனையைப் போக்குகிறது. அதே நேரம் தேன் முடிக்கு ஊட்டத்தை அளிக்கிறது மற்றும் தயிர் முடிக்கு தேவையான புரோட்டீனைக் கொடுக்கிறது. இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து தலைக்கு பயன்படுத்தும் போது, முடி நன்கு அடர்த்தியாக வளர்கிறது.

பயன்படுத்தும் முறை:

1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மூன்றையும் ஒரு பௌலில் எடுத்து ஒன்றாக கலந்து, தலைமுடியின் வேரில் இருந்து முடியின் முனை வரை தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். இந்த ஹேர் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், முடி அடர்த்தியாக வளர்வதோடு, பொலிவோடும் காணப்படும்.

தயிர், மில்க் க்ரீம், முட்டை

தயிர் மிகவும் சிறப்பான ஈரப்பதமூட்டும் நன்மைகளை வழங்கும் வேளையில், ஸ்கால்ப் மற்றும் மயிர்கால்களை சுத்தம் செய்வதிலும் சிறப்பான பொருள். மில்க் க்ரீம் தலைமுடியின் வறட்சியைப் போக்கக்கூடியது. முட்டை தலைமுடிக்கு தேவையான புரோட்டீனை வழங்கி, முடியை வலுவாக்குகிறது.

பயன்படுத்தும் முறை:

தயிர், மில்க் க்ரீம் மற்றும் முட்டையை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். வறட்சியான முடியைக் கொண்டவர்கள் இப்படி வாரத்திற்கு 2 முறை செய்யவும். அதுவே எண்ணெய் பசை முடியைக் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தவும்.

கற்றாழை, ஆலிவ் அயில்

கற்றாழை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, வறண்ட இருக்கும் தலைமுடி பட்டுப் போன்று மாற்றக்கூடியது.

பயன்படுத்தும் முறை:

சிறிது ஆலிவ் ஆயிலை சூடேற்றி, அதில் நற்பதமான கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, அந்த கலவையை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

கடலை மாவு

கடலை மாவு கெமிக்கல் இல்லாத ஒரு பொருள். இது தலைமுடிக்கு ஊட்டமளித்து, தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். அதோடு, இது ஒரு சிறப்பான தலைமுடியை சுத்தப்படுத்தும் பொருளும் கூட.

பயன்படுத்தும் முறை:

100 கிராம் கடலை மாவு 1/2 கப் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தலைமுடியின் வேர் பகுதியில் தடவி 30 நிமிடம் அல்லது நன்கு காயும் வரை ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசவும்.

வெங்காய சாறு

வெங்காய சாறு தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் மிகச்சிறப்பான பொருள். இதன் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

பயன்படுத்தும் முறை:

ஒரு பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி மாதத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதைக் காணலாம்.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி ஒரு வகையான களிமண். இதில் இரும்பு ஆக்ஸைடு, அலுமினியம் மற்றும் சிலிகா போன்ற தலைமுடியின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் தேவையான பொருட்கள் உள்ளன.

பயன்படுத்தும் முறை:

100 கிராம் முல்தானி மெட்டியை வெதுவெதுப்பான நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவ வேண்டும். குளிர்காலத்தில் பயன்படுத்தினால், 5 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முடியை அலச வேண்டும். அதுவே கோடைக்காலத்தில் பயன்படுத்தினால், 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

Related posts

கற்றாழை முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்கிறது!

nathan

கூந்தல் நீளமாக வளர உதவும், அதிசய மூலிகை எண்ணெய்கள்!

nathan

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி?

nathan

பலவீனமான தலைமுடியை வலிமையாக்க சூப்பர் டிப்ஸ் !

nathan

முடி உதிர்வு மற்றும் நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை கலரிங்!

nathan

முடி வெடிப்பை தடுக்கும் ஹேர் மாஸ்க்

nathan

தலைக்கு குளிக்க நேரமில்லையா? உங்க தலை கப்பு அடிக்குதா? இதோ சில டிப்ஸ்…

nathan

மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர

nathan

தெரிஞ்சிக்கங்க…இளநரையா ? குழப்பமா இருக்கா? இந்த பதிவு உங்களுக்காக…!!!

nathan