p42a1
சரும பராமரிப்பு

இடுப்பு, கழுத்து, அக்குள்… கருமை நீங்க அருமையான வழிகள்!

இடுப்பு, கழுத்து, அக்குள்…

கருமை நீங்க அருமையான வழிகள்!பாவாடை அணியும் பகுதியின் கருமை, கழுத்தின் பின்பகுதி கருமை, அக்குள் கருமை, பிரேஸியர் லைன்… இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் சொல்கிறார்… சென்னை, க்ரீன் டிரெண்ட்ஸ் பியூட்டி சலூனின் சீனியர் டிரெயினர் பத்மா…

இடுப்பின் கருமை
p42a%281%29
புடவையோ, சுடிதாரோ இடுப்பை இறுக்கிப் பிடிப்பதுபோல அணிவதால் அங்கு கருமை படிந்துவிடும். அதைப் போக்க தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்/பாதாம் எண்ணெய் சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் 5 – 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர், ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இடுப்பைச் சுற்றித் தடவி, மசாஜ் கொடுக்கவும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். அடுத்ததாக, இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து `பேக்’ போடவும். காய்ந்தவுடன் அதைக் கழுவி, மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்யவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்யும்போது கருமை மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.

பின் கழுத்தின் கருமை
p42c
ஒரு ஸ்பூன் தவிடு எடுத்து, ஈரக்கையினால் அதைத் தொட்டு, தினமும் குளிக்கும் முன் கழுத்தின் பின்புறம் மசாஜ் கொடுக்க… இறந்த செல்கள் நீங்கிவிடும். பிறகு, பழுத்த பப்பாளியின் சதைப்பகுதி இரண்டு ஸ்பூனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் `பேக்’ போட்டு, 10 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால், கருமை காணாமல் போவதுடன் சருமமும் மிருதுவாகும்.

அக்குள் பகுதியின் கருமை
p42t
அக்குள் பகுதிக்குத் தேவையான காற்று கிடைக்காததால் வியர்வை மற்றும் அழுக்கு சேர்ந்து கருமை படர்ந்துவிடும். இதைத் தவிர்க்க, வாரம் இருமுறை ஏதாவது எண்ணெயைக் கொண்டு அக்குளுக்கு மசாஜ் கொடுத்து, மாதுளம்பழத்தின் கொட்டைகளை உலர்த்தி செய்யப்பட்ட பவுடர் ஒரு ஸ்பூனுடன் தண்ணீர் சேர்த்துக் குழைத்து, அதனுடன் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் கலந்து மசாஜ் கொடுக்கவும். பிறகு, ஒரு ஸ்பூன் தேனுடன், அரை மூடி எலுமிச்சையின் சாறு கலந்து `பேக்’ போடவும். காய்ந்தவுடன் கழுவவும். 15 நாட்களுக்கு ஒருமுறை பார்லரில் `பிளீச்’சும் செய்துகொள்ளலாம்.

பிரேஸியர் லைன்

மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால், பிரேஸியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை, தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையும், நாளடைவில் புண்ணாக மாறி தழும்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு உள்ளாடை விற்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். தவிர, குளிக்கும் முன், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது வெண்ணெயைக் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.

Related posts

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இரவில் இதை செய்ய மறக்காதீங்க…

nathan

சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் அவசியமா?

nathan

ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை வழங்க அன்னாசிப்பழம் எவ்வாறு உதவுகிறது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது..

nathan

மினுமினுப்பான கழுத்துக்கு…. Skin Care Tips for a discoloured Neck

nathan

அக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

nathan

இதை ட்ரை பண்ணுங்க… மிக பெரிய பிரச்னை பிரசவ கால தழும்புகள் மறைய… Super tips

nathan

பெண்களே தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?

nathan

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போக காரணம் என்ன?

nathan

கழுத்தைச் சுற்றி கொஞ்சம் புளி தடவினா காணாமல் போகும் கருமையான படலம்..!!அற்புதமான எளிய தீர்வு

nathan