இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி வெளியிட்டுள்ள குட்டைப்பாவாடை புகைப்படம் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரராக வலம் வருபவர் முகமது ஷமி. சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கூட அசத்தியிருந்தார்.
முகமது ஷமிக்கும் ஹசின் ஜஹானுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஐரா என்ற மகள் உள்ளார்.
ஆனால் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனது கணவரும், அவரது பெற்றோரும், தன்னை அடித்து துன்புறுத்துவதாக ஹசின் ஜஹான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து இருவரும் பிரிந்தனர்.
இருந்த போதிலும் இருவரும் இன்னும் விவாகரத்து பெற்று கொள்ளவில்லை. கணவனை பிரிந்த பின்பு மொடலிங் துறையில் ஈடுபாடு காட்டிய ஹசின் ஜஹான் அவ்வபோது மார்டன் ஆடைகளை அணிந்தவாறு புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார்.
இவர் அணியும் ஆடைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் தற்போது போட்டுள்ள ஒரு புகைப்படம் ஒன்றால் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ஹசின் ஜஹான் சமீபத்தில் கடற்கரையோரம் படகு ஒன்றில் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அதில் சிகப்பு நிறத்திலான மிகவும் குட்டையான பாவாடையை அவர் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பதற்கு ரசிகர்கள் இதயங்களை பறக்கவிட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ அவர் மீது விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.
இந்தியாவின் புகழ்பெற்ற பந்துவீச்சாளராக முகமது ஷமி இருந்து வருகிறார். அவரின் மனைவியாக இருந்துக்கொண்டு இப்படியா பொது இடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துக் கொண்டு நிற்பது என சாடியுள்ளனர்.