retrsed
பிற செய்திகள்

யங் மாமியார்.. தீபா நேத்ரன் பயோகிராஃபி! சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரட்சிதாவின் அம்மாவாக நடித்து வருகிறார் தீபா நேத்ரன். கேரளாவை சேர்ந்தவர். தனது 17 வயதில் 1997ல் நிலவில் களங்கமில்லை என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் நடிகர் நேத்ரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் இவரது முதல் அறிமுகம் 2007ஆம் ஆண்டு ஜெயாடிவியில் ஒளிபரப்பான அலைபாயுதே சீரியல்தான். அதன்பிறகு ராஜ்டிவியில் ஹலோ சியாமளா தொடரில் நடித்தார். விஜய்டிவியின் கனா காணும் காலங்கள் தொடரிலும் நடித்துள்ளார். அதன்பிறகு சுமங்கலி தொடரில் நடித்து பிரபலமானார். தமிழில் சரவணன் மீனாட்சி சீரியல் இவருக்கு ஹைலைட்டாக அமைந்தது. இந்த சீரியலில் கவினின் அம்மாவாக நடித்திருப்பார்.
retrsed
ஜீ தமிழின் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்து திருப்புமுனையாக அமைந்தது நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்தான். அதில் தேவியின் அம்மாவாக, மாயனின் மாமியாராக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ஜீ தமிழின் நாச்சியார்புரம் சீரியலில் ரட்சிதாவின் அம்மாவாக நடித்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2விலும் ரட்சிதாவின் அம்மாவாக நடித்து வருகிறார். தனது இளம் வயதிலேயே அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார் தீபா.

தீபா தனது கணவர் நேத்ரனை போலவே நல்ல டான்ஸரும் கூட. ஸ்டார் கிட்சன், நம்ம வீட்டு மகாலட்சுமி, ஜோடி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டுள்ளார். ஜீ தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது வாங்கியுள்ளார். தீபாவின் மகள்களான அபி மற்றும் அஞ்சனா உடன் போட்டோ ஷூட் நடத்தி அதையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

தீபா நேத்ரன் எப்பவும் எல்லா சீரியல்களிலும், படங்களிலும் பாசிட்டிவ் கேரக்டரில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதை விரும்ப மாட்டாராம்.

Related posts

யாருடன் திருமணம்..! முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை நயன்தாராவிற்கு திருமணம்..

nathan

இருசக்கர வாகனத்தில் அந்தரத்தில் பறந்து நொடியில் உயிரிழந்த வாலிபர்.. வீடியோ காட்சி

nathan

ஒரே நாள்ல சரியாயிடும்..!! முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க…

nathan

ஜாக்பாட்டான வாய்ப்பு யாருக்கெல்லாம்.. அந்த மாஸ் நடிகர் படத்தில் நடிக்க துண்டு போடும் பிரபலங்கள்!

nathan

மிரள வைத்த காரணம்.!! விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட செல்லாத ஷகிலா..

nathan

நடிகர் விவேக்கின் மறைவிற்கு சத்யராஜ் இரங்கல்!

nathan

விவேக்கின் மறைவு கேட்டு கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

nathan

குணமடைந்து மீண்டு விவேகமே விழித்து வா..! தமிழகமே அழைக்கிறது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

nathan

தற்போது தனி ஆளாக அசத்தலாக கெத்து காட்டும் ஆலியா மானசா!

nathan