கிய புகைப்படம்
Other News

சுவையான கொத்தமல்லி வடை

விலை மலிவில் கிடைக்கும் கீரை தான் கொத்தமல்லி. உணவுகளை அலங்கரிக்கப் பயன்படும் கொத்தமல்லியானது, உணவின் சுவையை அதிகரிப்பதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களையும் கொடுக்கிறது. இந்த கொத்தமல்லியைக் கொண்டு வடை செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா?

அதிலும் குளிர்ச்சியான மாலை வேளையில் டீ/காபியுடன் வீட்டில் இருக்கும் கொத்தமல்லியைக் கொண்டு வடை செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு கொத்தமல்லி வடையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 2 கப்
கொத்தமல்லி – 1 கட்டு (நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மாங்காய் தூள், மிளகாய் தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின்பு அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னறிமாக பொரித்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி வடை ரெடி!!!

Related posts

வீடியோ-முதல் கர்ப்பத்தை சிலை செய்து வைத்திருக்கும் பிரபலம்!

nathan

உங்களுக்கு தெரியுமா நீங்கள் இறந்தபின் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் டேட்டா என்ன ஆகும் தெரியுமா?

nathan

பாறை இடுக்கில் விழுந்த காதலி! அப்படியே தவிக்கவிட்டு சென்ற காதலன்!

nathan

நயன்தாராவாக மாறிய இலங்கை பெண்

nathan

லீக் ஆன வீடியோவால் பெரும் சர்ச்சை!பாடசாலையில் உல்லாசம்

nathan

இயக்குனர் அட்லீ தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்

nathan

பசங்க பட நடிகர் கிஷோர் அப்பாவாக போறாரா?

nathan

சுற்றுலா சென்ற நடிகை காஜல் அகர்வால்

nathan