28.2 C
Chennai
Monday, Dec 23, 2024
uyiop
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.

வெட்டிவேர் அதிக வாசம் உடையதாகவும், மருத்துவ தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது. வெட்டிவேர் வாசனையை சுவாசிப்பதால் தலைவலி நீங்கும், உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.

வெட்டிவேர், ஆவாரம் பூ, ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள் ஆகியவற்றை நன்றாக உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தண்ணீரில் குழைத்து ஃபேஸ்-பேக் போல முகத்துக்குப் பயன்படுத்த, முகம் பொலிவடையும். வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.
மண்பானை தண்ணீரில் சிறிது வெட்டிவேரைச் சேர்த்து ஊறவைக்க, நீருக்குச் சுவையும் பலன்களும் பலமடங்கு கூடும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், வெட்டிவேர், ஆவாரம் பூ, சடாமஞ்சி போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஊறவைத்து, முடித் தைலமாக உபயோகிக்க, தலைமுடிக்குக் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.
காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். வெட்டிவேரை தண்ணீர் விட்டு அரைத்து பசையாக செய்துகொண்டு பல்வலி, தலைவலி போன்றவற்றுக்கு நிவாரணியாக பயன்படுத்தலாம்.
uyiop
முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. வெட்டிவேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது.

கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.

Related posts

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan

அடேங்கப்பா! டிடி முன்னாள் கணவரின் இரண்டாவது மனைவி இவரா? நீங்களே பாருங்க.!

nathan

வேனிட்டி பாக்ஸ்: கன்சீலர்

nathan

பிரபல தொலைக்காட்சி நடிகைகளின் ஒரு நாள் சம்பளம்!வெளிவந்த தகவல் !

nathan

முகம் பளபளப்பாக எளிய அழகுக் குறிப்புகள்!

nathan

ஒரு செல்லோடேப் எப்படி உங்கள் மேக்கப்பை கச்சிதமாக்கும் என தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் அப்பெண்டிக்ஸ்…!

nathan

அழகு குறிப்புகள் சரும பிரச்சனைகளுக்கு விரைவில் நிவாரணம்

nathan

கவர்ச்சியான தோற்றம் வேண்டுமா

nathan