26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
ld955
சரும பராமரிப்பு

குளிர் கால அழகு குறிப்புகள்

எவ்வளவு வெயிலை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம். தாகம் தணிக்க குளிர்ந்த பானங்கள், கடற்கரையில் காற்று வாங்குவது, நான்கைந்து முறை குளியல் என வெயிலை சமாளிக்கப் பல வழிகள். ஆனால், குளிரின் பாதிப்பிலிருந்து தப்பிப்பது அத்தனை சுலபமல்ல.

குளிர் காலத்தில் சருமமும், கூந்தலும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. குளிர்கால அழகுப் பராமரிப்புக்கு வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய எளிமையான சிகிச்சைகளைச் சொல்கிறார் அழகுக் கலை மற்றும் வாசனை சிகிச்சை நிபுணரான கீதா அஷோக்.

”குளிர் காலத்துலதான் நம்ம உடம்போட சூடு அதிகமாகும். குளிர் சீசன்ல கமலா ஆரஞ்சு, சீத்தாப்பழமெல்லாம் நிறைய கிடைக்க இதுதான் காரணம். தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறி, பழங்களை இந்த நாட்கள்ல நிறைய எடுத்துக்கணும். இந்த சீசன்ல தாகமே எடுக்காது. தண்ணீரே குடிக்க மாட்டோம். ஆனா, அது ரொம்பத் தப்பு. தாகம் எடுக்காட்டாலும், அடிக்கடி தண்ணீர் குடிக்கணும்.குளிரோட தாக்கத்துல முடி உதிரும், பொடுகு அதிகமாகும். கண் மற்றும் பாத எரிச்சல் வரும். மலச்சிக்கல் இருக்கும். வியர்வையே இல்லாததால, சருமத் துவாரங்கள் சுருங்கி, பொலிவிழக்கும்.

* வெயில் நாட்களைவிட குளிர் நாட்கள்ல சருமம் அதிகம் கருத்துப் போகும்னா நம்ப முடியுதா? அதனால இந்த சீசன்ல சன் பிளாக் உபயோகிக்க வேண்டியது அவசியம். ‘நான் காமிடான்’னு குறிப்பிடப்பட்டுள்ள சன் பிளாக் பெஸ்ட். அது சருமத் துவாரங்களை அடைக்காது. வாட்டர் பேஸ்டு சன் பிளாக்ல 1 துளி லெமன் கிராஸ் ஆயிலும், 1 துளி லேவண்டர் ஆயிலும் கலந்து தடவினா, சருமத்துக்கு கூடுதலா 1 மணி நேரப் பாதுகாப்பு கிடைக்கும்.

* பொடுகே இல்லாதவங்களுக்குக் கூட இந்த நாள்ல அதிக பொடுகு வரும். 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலையும், 1 டீஸ்பூன் கடுகு எண்ணெயையும் கலந்து, அதுல 1 துளி ரோஸ்மெர்ரி ஆயில், 1 துளி டீ ட்ரீ ஆயில், 1 துளி லேவண்டர் ஆயில் கலந்து தலைக்கு மசாஜ் பண்ணி, 2 மணி நேரம் கழிச்சு, மைல்டான ஷாம்பு உபயோகிச்சு அலசலாம்.

* போதுமான ஆக்சிஜன் இல்லாம, தலை முடி உதிர்வும் அதிகமா இருக்கும். 1 டீஸ்பூன் அவகேடோ ஆயிலும், 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயும் கலந்து, அதுல 1 துளி ரோஸ் மெர்ரி ஆயில், 2 துளி சிடார்உட் ஆயில், 1 துளி ரோஸ் ஆயில், 1 துளி பே ஆயில் கலந்து மசாஜ் செய்யணும். வெந்நீர்ல நனைச்சுப் பிழிஞ்ச டவலால தலைக்கு ஒத்தடம் மாதிரி கொடுத்து, 1 மணி நேரம் கழிச்சு, அலசினா, முடி பட்டு போல மாறும். முடி உதிர்வு உடனே நிற்கும்.

* 2 டீஸ்பூன் வெண்ணெய்ல, 1 டீஸ்பூன் தயிர் கலந்து, அதுல 2 துளி ஜெரேனியம் ஆயில், 2 துளி யிலாங் யிலாங் ஆயில், 2 துளி லேவண்டர் ஆயில், 1 டீஸ்பூன் கிளிசரின் கலந்து, பிளவு பட்ட முடியோட நுனிகள்ல தடவி, 2 மணி நேரம் கழிச்சு அலசினா, மிருதுவாகும்.

* பனிக்காலத்துல உதடுகள் வறண்டு வெடிக்கும். அடிக்கடி எச்சிலால ஈரப்படுத்திட்டே இருப்போம். அது உதடுகளை இன்னும் வறண்டு போக வச்சு, கருப்பாக்கும். எப்போதும் கைல பெட்ரோலியம் ஜெல்லியோ, லிப் பாமோ வச்சுக்கிறது நல்லது.
பீட்ரூட் சாறுல, 1 டீஸ்பூன் தேன், 10 துளி லெமன் ஆயில், 10 துளி யிலாங் யிலாங் ஆயில், 5 துளி ரோஸ் ஆயில் கலந்து, பஞ்சுல தொட்டு உதடுகள்ல தடவினா, கருமையும் மறையும். வறட்சியும் நீங்கும்.

* பார்லியைப் பொடிச்சு, தண்ணீர்ல கொதிக்க வச்சு வடிகட்டி, அந்தத் தண்ணீரை மட்டும் எடுத்துக்கணும். அதுல 3 துளி லோட்டஸ் ஆயில், 3 துளி ஜாதிபத்ரி ஆயில், 2 துளி ரோஸ் ஆயில் கலந்து, பஞ்சுல முக்கி, கண்களுக்கு மேல வச்சிருந்தா, கரு வளையங்கள் மாயமாகும். கண்கள் பளபளப்பாகும். களைப்பும் நீங்கும்.

* கல்கண்டை பொடியாக்கவும். கொஞ்சம் சமையல் எண்ணெய் எடுத்து, அதுல கல்கண்டு பொடி, 1 துளி பெர்கமாட் ஆயில், 2 துளி லேவண்டர் ஆயில் கலந்து, கைகள் மேல மென்மையா தேய்ச்சு, மசாஜ் பண்ணி, 10 நிமிஷம் கழிச்சுக் கழுவினா, குழந்தையோட சருமம் மாதிரி உங்க கைகள் மிருதுவா மாறியிருக்கும்.

* லிக்விட் பாரஃபின்ல 5 துளி யிலாங் யிலாங் ஆயில், 2 துளி நெரோலி ஆயில், 2 துளி ரோஸ் ஆயில் கலந்து, கால்களைக் கழுவின பிறகு பாதங்கள், கால்களோட மேல் பகுதில தடவி, 5 நிமிஷம் கழிச்சு, சாக்ஸ் போட்டுட்டுத் தூங்கணும். கால்கள்ல உள்ள வெடிப்பு, சுருக்கமெல்லாம் நீங்கி, கால்கள் மிருதுவா மாறிடும்.
ld955

Related posts

15 நிமிடத்தில் கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா?

sangika

முதல் முறையாக பார்லர் போகும் போது..

nathan

குளிர்கால சரும பராமரிப்பு

nathan

ஆயுள் முழுக்க இளமையோடு ஜொலிக்க உதவும் அமிர்தப்பொடி… வீட்டில் எப்படி தயாரிப்பது..?இத படிங்க!

nathan

சரும சுருக்கத்தை போக்கும் டைட்னிங் பேஷியல்

nathan

முகத்தில் ஏற்பட கூடிய எல்லா வித பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வை தர!….

sangika

ரோசாசியா என்றால் என்ன?

sangika

பெண்களின் அழகைப் பாதுகாக்கும் கிருணிப்பழம்

nathan