27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
jkjkhu
பிற செய்திகள்

கோகுலத்தில் சீரியல் தொடரில் வசுந்தரா இன்ஜினியரிங் படித்துள்ள இவர் நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் மூலம் சீரியல் என்ட்ரி

ஒர்ஜினல் பெயர் ஆஷா கவுடா. கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இன்ஜினியரிங் படித்துள்ள இவர் நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் செய்துகொண்டிருந்தார். பல விளம்பரங்களில் நடித்துள்ளார் ஆஷா. அப்போதுதான் கன்னட கலர்ஸ் சூப்பர் சேனலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சில சீரியல்களில் நடித்து கன்னடத்தில் பிரபலமானார். இதில் கிடைத்த பாப்புலாரிட்டி தமிழில் அறிமுகமானார்.

jkjkhu

தமிழ் சின்னத்திரையில் இவரது முதல் அறிமுகம் ஜீ தமிழ் சேனலில்தான். 2019ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீரியல் தொடரில் வசுந்தரா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஆஷாவுக்கு ஜோடியாக நந்தா மாஸ்டர் அர்ஜூன் கேரக்டரில் நடித்து வருகிறார். ஏழை பெண்ணான ஆஷா தனது குடும்பத்தை காப்பாற்ற கூடிய பொறுப்பில் உள்ளவராக நடிக்கிறார். அர்ஜூன் – வசுந்தரா இடையேயான காமெடி கலந்த காதல் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீரியல் ஆரம்பித்து சில வாரங்களிலேயே நல்ல ரீச் ஆனது. தற்போது 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது கோகுலத்தில் சீதை.

ஆஷாவின் மெயின் ஹாபி மியூசிக், டான்ஸ்தான். சோசியல் மீடியாவில் இவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வசுந்தரா சினிமா நடிகைகளுக்கு இணையாக ஏகப்பட்ட போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோக்கள், இன்ஸ்டா ரீல்ஸ் என ஆக்டிவாக இருக்கிறார்.

கர்நாடகாவை சேர்ந்த ஆஷா தமிழ் பெண்ணை போல் சேலை கட்டி வெளியிடும் ஃபோட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. ஜீ தமிழ் குடும்ப விருது வழங்கும் விழாவில் விஜய் சேதுபதியின் கையால் விருது வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் வசுந்தரா.

Related posts

ஒரே நாள்ல சரியாயிடும்..!! முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க…

nathan

சிகிச்சை பலனின்றி பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்..!

nathan

முன்னர் கணவர் அடித்து துன்புறுத்துவதாக ராதா புகாரளித்து புகாரை வாபஸ் வாங்கிய நடிகை!

nathan

அடேங்கப்பா! நவ்யா நாயர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி…

nathan

நிறைய படங்களில் வில்லன் ரோல்களில் நடித்து அசத்தியுள்ளார் மௌனராகம் கார்த்திக் கிருஷ்ணா

nathan

கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து தூக்கத்தை கெடுத்த ஜான்வி கபூர்!

nathan

3வது மனைவியாகும் பிரபல நடிகை.. அமீர்கானை நேசித்தர் தான் ‘தங்கல்’படத்தில் நடித்த பாத்திமா சனா.

nathan

நல்லா காத்து வாங்குறீங்க.. வேற லெவல் போட்டோ!

nathan

மிரள வைத்த காரணம்.!! விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட செல்லாத ஷகிலா..

nathan