29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
Nature Henna8
நகங்கள்

நகத்திற்கு இயற்கை மருதாணியே சிறந்தது

நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது அவ்வளவு நல்லதல்ல. சாதாரணமாண எந்தவித வேலைக்கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே இருக்கும். மேலும் அது பிய்ந்தும் உடைந்தும் தொல்லை தரும். நடுவில் பிரிந்து அல்லது அரைகுரையாக உடைந்து மூளியாகக் காட்சியளிக்கும் நகம் விரலின் அழகையே கெடுத்துவிடும்.

எனவே அதிகமாக நகம் வளர்க்காதீர்கள். நகம் வெட்டியை பயன்படுத்தி குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை வெட்டிவிடுங்கள். நகத்தை நீக்குவதற்கு பல்லால் கடிப்பதை தவிர்க்கவும். அது அசிங்கமான பழக்கம் என்பதை விட தேக நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

நகங்களுக்கு சாயம் பூசி அழகுபடுத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். சாதாரணமாக நாம் இதற்கு மருதாணி இலைகளையே பயன்படுத்துகிறோம்.

மருதாணி அரைக்கும் போது நன்கு வெண்ணெய் போல் அரைப்பது சிறந்ததாகும். அப்போதுதான் அது நகங்களில் நன்றாக பற்றும். மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும்.

விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும். இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும்.

நகங்களுக்குப் பூசிய பின்னர், உள்ளங்கைகளில் அழகிய வேலைபாடுகள் அடங்கிய, கவர்ச்சி பொருந்திய “டிசைன்களை” மருதாணியைக் கொண்டு இடலாம்.

உள்ளங்கை அளவே உள்ள அட்டைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் அழகான டிசைன்களை வரைந்து, நடுவில் வெட்டி எடுக்கவும். பின், டிசைன்கள் வெட்டப்பட்ட அட்டையை உள்ளங்கையில் வைத்து, அதன் மீது மருதாணி விழுதை நன்கு பரப்பி அதன் இலையை வைத்து கட்டிடவும்.

மறுநாள் மருதாணியை எடுத்துவிடும் போது கைகளில் அழகான டிசைன்கள் அமைந்து விடும். உள்ளங்கைகளைச் சுற்றிப் பொட்டுகள் வைப்பதும் உண்டு.

மருதாணியைத் தவிர, பலரகச் செயற்கைப் பூச்சுகளைப் பலர் உபயோகிப்பதுண்டு. சிவப்பில் பல ரகங்களில் இது கிடைக்கும் இயற்கை நிறத்திலும் உண்டு. இயற்கை நிற பூச்சு நகத்திற்கு தனி நிறம் கெடாது. ஒருவித பளபளப்பை மட்டும் உண்டு பண்ணி மெருகேற்றி விடுகிறது.

பொதுவாக இவ்வகை இயற்கை நிறப்பூச்சைப் பயன்படுத்தி நகங்களுக்கு பொலிவு பண்ணுவது ஆடம்பரமற்ற அமைதியான அழகை தரும்.

ஒவ்வொரு தடவையும் நகப்பூச்சை பயன்படுத்தும் போதும் பழைய பூச்சை அகற்றிவிடுவது மிகமிக அவசியம். காய்ந்த பழைய பூச்சை எடுத்துவிட கத்தியைக் கொண்டோ அல்லது வேறு ஏதும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தியோ நகத்தை சுரண்டுவது நல்லதல்ல.

அதற்குறிய “பாலிஸ் ரிமூவரையே” பயன்படுத்த வேண்டும். பழைய பூச்சைக் களைந்து விரல்களை நன்கு சுத்தப்படுத்திப் பின்னர் திரும்பவும் பூசவும்.

கைகளுக்கு பயன்படும் இந்த பூச்சுகளே பாதங்களுக்கும் பயன்படக்கூடியவை.
Nature Henna8

Related posts

நகங்களும் சுவாசிக்கும் உங்கலுக்கு தெரியுமா?

nathan

விரல் நகங்களை பராமரிப்பது எப்படி?

nathan

மஞ்சள் நிற நகங்களை சரி செய்யமுடியுமா?nail care tips in tamil

nathan

நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்

nathan

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….

sangika

நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் !…

sangika

அழகான நகங்களைப் பெற

nathan

நகங்கள் உடையாமல் நீளமாக வளர டிப்ஸ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

nathan