25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1
முகப் பராமரிப்பு

அறுபதி வயதிலும் இளமையாக ஜொலிக்க அன்னாசி ஃபேஸ் பேக்

வைட்டமின் – சி நிறைந்த அன்னாசிப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

* அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும்.

* சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து கலந்து இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. இதனை தினமும் பயன்படுத்தலாம்.

* சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன், ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கும். வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு. இரண்டு அன்னாசிப்பழத் துண்டுகளுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழாகப் பூசி 15 முதல் 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். சுருக்கங்கள் மறைந்து, சங்குபோல் கழுத்து மின்னும்.

* ஒரு டிஸ்பூன் அன்னாசிப்பழச் சாறுடன் ஒரு டீஸ்பூன் கடலைமாவை கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த பேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசை நீங்கி, பளிங்கு போல் பளிச்சிடும் உங்கள் முகம். அரை கப் தேங்காய் துருவலுடன், 2 டீஸ்பூன் வெந்தயப் பவுடர், 2 டீஸ்பூன் அன்னாசிப்பழச் சாறு கலந்து தலையில் தேய்த்து வந்தால், பளபளப்புக் கூடுவதுடன் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
1

Related posts

முயன்று பாருங்கள் எளிய முறையில் மூக்கின் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல்

nathan

கரும்புள்ளியை போக்க வெங்காயமும் பூண்டும் போதும்!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா?

nathan

முகப்பரு தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை வேகமாக மறைக்க உதவும் வழிகள்!

nathan

உங்களுக்கு இரண்டே வாரத்தில் கரும்புள்ளிக்கு குட்-பை சொல்லணுமா?அப்ப இத படிங்க!

nathan

முகப்பருவை போக்கும் வில்வம்

nathan

நீங்கள் கற்றாழை தேய்ச்சும் கலராகலையா?இதை முயன்று பாருங்கள்

nathan

முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவது குறைய

nathan