29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
முகப் பராமரிப்பு

ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா? இதோ டிப்ஸ்

மென்மையான ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிப்பது உண்டு, அப்படி ஆப்பிள் போன்ற கன்னங்களை பெறுவதற்கு இதோ டிப்ஸ்,

ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெறலாம்.

மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.

தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும்.

தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிட வேண்டும்.

தோலில் எண்ணெய் பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச் சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதை போட்டு கன்னம் தங்கம் போல் மின்னும்.

ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு கழுவவும்.

தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளப்பாக்கும்.

தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணையுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வர, ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.

தேன் அல்லது நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி.

பால் – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன், பார்லித்தூள் – 1 டீஸ்பூன் ஆகியவற்றை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து நுரை வரும் வரை நன்கு அடித்துக் கலக்கவும்.

அப்போது கிடைக்கும் கிரீமை, முகம், கழுத்து, கண்களை சுற்றி என அனைத்துப் பகுதிகளிலும் பூசவும். அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும்.

உங்கள் கன்னம் வெண்மை பொலிவுடனும் மற்றும் முகம் பளபளப்புடனும் இருக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா முகம் பளபளன்னு இருக்க இந்த ரெண்டு பொருள் போதும்…

nathan

முகப்பருவை போக்கி பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…! சூப்பர் டிப்ஸ்

nathan

வெயிலில் சரும நிறத்தை பாதுகாக்கும் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

nathan

பக்கவிளைவுகள் இல்லாத. இயற்கை ஃபேஷியல்கள்.

nathan

தெரிஞ்சிக்கங்க…என்றும் இளமையாக தெரிய வேண்டுமா….அப்ப தினமும் செய்யுங்க…

nathan

உடலில் ஏற்பட்ட தழும்பை மறைய வைக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சூப்பர் டிப்ஸ்! முகத்தில் இறந்த செல்களை நீக்கி பொலிவடைய செய்யும் தக்காளி சாறு…!

nathan

முகம் பளபளப்பாக, கண்கள் அழகு பெற, தோலின் நிறம் பொலிவு பெற……

sangika

சரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் தெரியுமா?இதை படிங்க…

nathan