21 60d2528e78fda
Other News

சுவையான மலபார் சிக்கன் ரோஸ்ட்- செய்வது எப்படி?

சிக்கன் என்றால் பலருக்கும் அதீத பிரியம் உண்டு. அதிலும், மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்….

தேவையான பொருட்கள்

சிக்கன் லெக் பீஸ் – 6
வெங்காயம் – 20
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
தேங்காய் எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சமையல் எண்ணெய்- தேவையான அளவு

சிக்கன் ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோள மாவு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 1

 

செய்முறை

முதலில் சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே கத்தியால் கீறி விட வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸை வைத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.

சிக்கன் நன்றாக சிவக்கும் படி பொரிக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சூடான மற்றும் சுவையான மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெடி!!!

Related posts

முதல் திருநங்கை மருத்துவர் பிரியா: டாக்டராக சாதித்தது எப்படி?

nathan

ஆர் சுந்தராஜன் குடும்ப புகைப்படங்கள்

nathan

மணிரத்தினம் வீட்டின் தீபாவளி விருந்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

nathan

தயாரிப்பாளரோடு உறவில் இருந்து சினேகா!

nathan

தாயின் சடலத்தை சைக்கிளில் கட்டி எடுத்து சென்ற மகன்!

nathan

இனி 8 மாதங்களுக்கு இந்த இரண்டு ராசிகளுற்கு ஜாக்பாட் தான்

nathan

நடிகை சினேகா ஜவுளி கடை திறப்பு

nathan

நீங்களே பாருங்க.! இறந்த கணவருடன் வளைக்காப்பு கொண்டாடிய பிரபல நடிகை! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் குடும்பம்

nathan

ரச்சிதா குறித்த ரகசியத்தை உடைத்த தினேஷ் – இனி இதுதான் முடிவு!

nathan