28.8 C
Chennai
Monday, Jul 14, 2025
15 lauki green sabji 1
சைவம்

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

கோடை வெயிலின் தாக்கத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அடிக்கும் வெயிலில் உடலின் எனர்ஜியானது முற்றிலும் குறைந்துவிடுகிறது. மேலும் உடல் வெப்பமானது அதிகரித்துவிடுகிறது. இந்த சூழ்நிலையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் வகையிலும், உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் வகையிலும் உள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதில் ஒன்று தான் சுரைக்காய்.

சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதுடன், இது எளிதில் செரிமானமடையும். ஆனால் இந்த காயை பலருக்கு பிடிக்காது. இருப்பினும் இவற்றை கொத்தமல்லி, புதினா சேர்த்து சப்ஜி செய்தால், நிச்சயம் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த சுரைக்காய் சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் – 1 (நறுக்கியது)
கொத்தமல்லி – 1 கட்டு
புதினா – 1/2 கட்டு
பச்சை மிளகாய் – 2
வெங்காய பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு – 5 பற்கள்
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு சுத்தம் செய்து நீரில் கழுவி, அதனை ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கொத்தமல்லி மற்றும் புதினாவை மிக்ஸியில் போட்டு, அத்துடன் பூண்டு, பச்சை மிளகாய், தக்காயி சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு வெங்காய பேஸ்ட் சேர்த்து மிதமான தீயில் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் கிளறி, சுரைக்காய் துண்டுகளை சேர்த்து 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள மல்லி பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து உப்பு, மல்லி தூள், சாட் மசாலா, கரம் மசாலா சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

சுரைக்காயானது நீர் விட ஆரம்பிக்கும் போது, வாணலியை மூடி 5-6 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்கினால், ஹரியாலி சுரைக்காய் சப்ஜி ரெடி!!!

Related posts

மஷ்ரூம் பிரியாணி

nathan

பல கீரை மண்டி

nathan

சுவையான 30 வகை பிரியாணி

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலு மட்டர் சப்ஜி

nathan

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

கோவைக்காய் வறுவல்

nathan

பட்டாணி புலாவ்

nathan

தக்காளி முருங்கைக்காய் குழம்பு: பேச்சுலர் ரெசிபி

nathan

மஷ்ரூம் ரைஸ்

nathan