27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
lpwithessentialoils
அழகு குறிப்புகள்

ஆண்களே! உங்களுக்கு முடி கொட்டுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு..

முடி கொட்டும் பிரச்சனை இல்லாதவர்களே இருக்கமாட்டார்கள். ஆண்கள், பெண்கள் என இருபாலருமே இப்பிரச்சனைக்கு உள்ளாவார்கள். ஆனால் அதில் அதிக அளவில் கஷ்டப்படுவது ஆண்கள் தான். ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுவது சாதாரணமானது தான். ஆனால் அதற்கு அதிகமாக கொட்டினால் தான், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 

முன்பெல்லாம் ஆண்களுக்கு 35 வயதிற்கு மேல் தான் வழுக்கை விழுந்தது. ஆனால் இன்றைய காலத்தில் 20 வயதை எட்டினாலே சொட்டை எட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறது. இதற்கெல்லாம் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான்.

 

ஆனால் சரியான பராமரிப்புக்களை முடிக்கு கொடுத்து, ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் முடி கொட்டுவதைத் தவிர்க்கலாம். சரி, இப்போது ஆண்களுக்கு ஏற்படும் முடி கொட்டும் பிரச்சனைக்கான தீர்வைப் பார்ப்போமா!!!

வைட்டமின் எச் குறைபாடு

உடலில் வைட்டமின் எச் என்னும் பயோடின் குறைபாடு ஏற்பட்டால், முடி உதிர ஆரம்பிப்பதோடு, நகங்களும் வலிமையிழந்து உடைய ஆரம்பிக்கும். எனவே பயோடின் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான முட்டை, வேர்க்கடலை, தயிர், ஆட்டு ஈரல், சால்மன் மீன், சீஸ் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வாருங்கள்.

புரோட்டீன்

உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், அதனாலும் முடி கொட்டும். எனவே புரோட்டீன் உணவுகளான பருப்பு வகைகள், மட்டன், சிக்கன், சோயா, பால் மற்றும் முட்டையை உணவில் அன்றாடம் சேர்த்து வாருங்கள்.

ஆயில் மசாஜ்

வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை கொண்டு நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளித்து வந்தால், மயிர்கால்கள் புத்துணர்ச்சி அடைவதோடு, புதிய மயிர்கால்களும் வளர தூண்டப்படும்.

முட்டை மற்றும் தயிர் பேக்

1/2 கப் தயிரில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்வதால், முடி கொட்டுவது குறைவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

வெங்காய சாறு

2-3 வெங்காயத்தை எடுத்து, நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, 1 மணிநேரம் ஊற வைத்து, நீரை வடித்து, குளிர வைத்து, பின் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு அலசினால், முடி உதிர்வது குறையும்.

பூண்டு பேஸ்ட்

பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, வழுக்கை விழும் இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, அவ்விடத்தில் முடி வளர ஆரம்பிக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ தயாரித்து, அதனை குளிர வைத்து, ஸ்கால்ப்பில் படும் படி தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலசினால், முடி கொட்டும் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்

நீங்கள் அதிக அளவில் புகைப்பிடிப்பவராக இருந்தால், அதனை உடனே நிறுத்துங்கள். ஏனெனில் புகைப்பிடிப்பதன் மூலம் ஸ்காப்பிற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து, அதனால் மயிர்கால்கள் பாதிக்கப்பட்டு, முடி கொட்ட ஆரம்பிக்கிறது.

மைல்டு ஷாம்பு

தலைக்கு பேபி ஷாம்பு போன்ற மைல்டு ஷாம்புவைப் பயன்படுத்துங்கள். இதனால் முடி மேலும் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். குறிப்பாக முடி கொட்டும் பிரச்சனை அதிகம் இருந்தால், அதற்கு காரணம் நீங்கள் பயன்படுத்தும் கெமிக்கல் அதிகம் நிறைந்த ஷாம்புவாகக் கூட இருக்கலாம்.

தலைக்கு குளிக்கவும்

ஹெல்மெட் பயன்படுத்துபவர்கள் தினமும் தலைக்கு குளிப்பது நல்லது. அதிலும் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி குளித்து வருவது மயிர் கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஹேர் ஜெல்லை தவிர்த்திடுங்கள்

பெரும்பாலான ஆண்கள் ஹேர் ஸ்டைலை மாற்ற ஹேர் ஜெல் பயன்படுத்துவார்கள். ஆனால் இவற்றை அதிக அளவில் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல் முடி உதிர்வதை அதிகப்படுத்தும்.

Related posts

நீங்களே பாருங்க.! பிரபல இயக்குனர் அகத்தியனின் மூன்று மகள்கள் மற்றும் மருமகன்கள் புகைப்படம்…

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

அல்சரினால் அவதியா? வைத்தியசாலைக்கு செல்லவேண்டியதில்லை இப்போ!…

sangika

கால்களின் அழகு மீன்களுக்கு தெரியும்

nathan

டிடியை நடனமாடும் போது காலணியால் அடித்த நபர்! வீடியோ

nathan

விஸ்கி ஃபேஸ் பேக்குகள்

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்!

nathan

உங்கள் முகத்தில் வைக்கக் கூடாத 11 விஷயங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!! | Tamil Beauty Tips

nathan