26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1
சரும பராமரிப்பு

இதோ எளிய நிவாரணம்! முதுகில் இருக்கும் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க சில டிப்ஸ்…

பருக்கள் முகத்தில் மட்டும் வருவதில்லை. சிலருக்கு முதுகு, கழுத்து, மார்பு போன்ற இடங்களிலும் அதிகம் வரும். அப்படி வரும் பருக்கள் போகும் போது கருமையான தழும்புகளை விட்டுச் செல்லும். அத்தகைய தழும்புகள் சரும அழகை கெடுக்கும் வண்ணம் இருக்கும்.

இதனால் ஆண்கள் ஜிம்மில் வெறும் பனியன் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்ய முடியவில்லை மற்றும் பெண்களால் தங்கள் ஜாக்கெட்டுகளின் பின்புறத்தில் விதவிதமான நெக்கை வைக்க முடியவில்லை.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை முதுகில் இருக்கும் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க சில எளிய வழிகளைக் கொடுத்துள்ளது. அவற்றை முதுகிற்கு மட்டுமின்றி, முகத்திற்கும் பயன்படுத்தலாம்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. எனவே சிறிது காட்டனை எடுத்து, நீரில் நனைத்து, பின் அதில் சிறிது டீ-ட்ரீ ஆயில் ஊற்றி, முதுகில் தடவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருமையான தழும்புகள் மறையும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் சிறந்த மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி, தழும்புகளைப் போக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு ஆலிவ் ஆயிலை முதுகில் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த செயலை தினமும் இரவில் செய்து வந்தால், விரைவில் தழும்புகள் மறைவதைக் காணலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்குவதோடு, கருமையையும் போக்கும். மேலும் இது பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிப்பதோடு, புதிய சரும செல்களையும் உற்பத்தி செய்யும்.

சந்தனப் பொடி மற்றும் ரோஸ் வாட்டர்

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முதுகில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவினால், சருமம் ஆரோக்கியமாகவும், தழும்புகளின்றி பொலிவோடும் இருக்கும்.

தக்காளி கூழ்

தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, முதுகில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, தழும்புகள் நீங்கும்.

பூண்டு

பூண்டிற்கு தழும்புகளைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு ஒரு துண்டு பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முதுகு முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்தால் கருமையான தழும்புகள் நீங்கும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் உலர வைத்து பொடி செய்து, அதனை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

கரும்புள்ளிகளுக்கு ‘குட்பை’!

nathan

இதோ ஈஸியான டிப்ஸ்.. எப்போதும் இளமையாக இருக்க ……

nathan

ஸ்கின் லைட்டனிங் சிகிச்சையை வீட்டில் செய்வது எப்படி,

nathan

சர்க்கரை நோய் ஏற்படுத்தும் சருமப் பிரச்சனைகள் பற்றித் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

nathan

25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க

nathan

மூக்கை சுற்றியுள்ள கரும் புள்ளிகளை எப்படி நீக்குவது ??

nathan

பாதவெடிப்பை நீக்கி பாதங்களை மென்மையாக வைத்திருக்க உதவும் சூப்பர் டிப்ஸ் …!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நயன்தாரா மாதிரி பொலிவான சருமத்தை பெற நீங்க இத செஞ்சா போதுமாம்…

nathan