25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 dryhair towel
ஆண்களுக்கு

ஆண்களே! முடி கொட்டாமல் தடுக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

ஆண்கள் அதிகம் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று தான் முடி உதிர்தல். ஆண்களின் முடி கொட்ட ஆரம்பித்தால் போதும், அவர்கள் படும் வருத்தத்திற்கு அளவே இருக்காது. ஏதோ இழந்தது போன்றே எப்போதும் சிந்தித்தவாறு, வீட்டில் உள்ளோர் அல்லது நண்பர்களிடம் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.

 

அப்படி புலம்பும் ஆண்களுக்கு தமிழ் போல்ட் ஸ்கை அற்புதமான சில டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அதைப் படித்து, அவற்றை அன்றாடம் பின்பற்றி வந்தால், முடி ஆரோக்கியமாகவும், முடி உதிராமலும் இருக்கும்.

முடியை தேய்த்து துடைக்க வேண்டாம்

ஆண்கள் செய்யும் பெரிய தவறு, தலைக்கு குளித்து முடித்த உடன், டவலைக் கொண்டு கடுமையாக தேய்ப்பார்கள். ஏன் என்று கேட்டால், அப்போது தான் சீக்கிரம் முடி காயும் என்பார்கள். ஆனால் அப்படி துணியால் தேய்த்தால், நீரில் ஊறியதால் வலிமையின்றி இருக்கும் மயிர்கால்கள் தேய்க்கும் போது கையோடு எளிதில் வந்துவிடும். எனவே எப்போதும் முடியை கடுமையாக தேய்ப்பதைத் தவிர்த்திடுங்கள். இதனால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

தினமும் ஷாம்பு போடுங்கள்

தினமும் தலைக்கு ஷாம்பு போடுவது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உண்மை தான். ஆனால் அது கெமிக்கல் அளவுக்கு அதிகமாக உள்ள ஷாம்புவைப் பயன்படுத்தினால் தானே தவிர, கெமிக்கல் மிகவும் குறைவாக உள்ள ஷாம்புவைக் கொண்டு தினமும் தலைக்கு குளித்தால், தலையில் உள்ள அழுக்குகள் மற்றும் வியர்வை நீக்கப்பட்டு, ஸ்கால்ப் ஆரோக்கியமாக முடி வளர்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.

கெமிக்கல்களை தவிர்க்கவும்

ஹேர் ஸ்டைல் செய்கிறேன் என்று பல ஆண்கள் ஹேர் ஜெல்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி கெமிக்கல் கலந்த ஹேர் ஜெல்லை முடிக்கு அதிகம் பயன்படுத்தினால், முடி உதிர்வது அதிகரித்து, முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, விரைவில் வழுக்கை கூட விழும் வாய்ப்புள்ளது.

இறுக்கமான தொப்பி வேண்டாம்

வெயிலில் செல்லும் போது, ஆண்கள் தொப்பி அணிந்து செல்வார்கள். ஆனால் நீண்ட நேரம் மிகவும் இறுக்கமான தொப்பியை அணிந்தால், காற்றோட்டமில்லாமல் தலையில் அதிகம் வியர்த்து, மயிர்கால்கள் வழுவிழந்து, அதன் மூலம் முடி அதிகம் கொட்டும். எனவே தொப்பி அதிகம் அணிவதைத் தவிர்த்திடுங்கள். அப்படியே அணிந்தாலும், நீண்ட நேரம் அணிவதைத் தவிருங்கள்.

ஹெல்மெட்

நீங்கள் பைக்கில் செல்பவராக இருந்தால், ஹெல்மெட் அணியும் போது, தலைக்கு காட்டன் துணியை கட்டிக் கொண்டு, பின் ஹெல்மெட் அணியுங்கள். இதனால் வியர்வையை துணி உறிஞ்சிவிடும். இதன் மூலம் முடியின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை

உங்களின் வாழ்க்கை முறையை உங்கள் முடியை வெளிப்படுத்தும். அதிலும் நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, மன அழுத்தமின்றி வாழ்ந்து வந்தால், அது உங்களின் முடியில் பிரதிபலிக்கும். அதுமட்டுமின்றி, தினமும் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டு வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, உங்கள் முடிக்கும் நல்லது.

Related posts

ஆண்களின் இந்த வகை ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்காதாம்

sangika

ஆண்களே! ஒரே க்ரீம் கொண்டு வெள்ளையாக வேண்டுமா? அப்ப பிபி க்ரீம் யூஸ் பண்ணுங்க…

nathan

பெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!

nathan

ஆண்மை அதிகரிக்க பனங்கற்கண்டின் நன்மைகள்!…

sangika

இது ஆண்களுக்கு மட்டும்: கண்டிப்பாக படிக்கவும்

nathan

ஆண்களின் முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில எளிய ஃபேஸ் ஸ்கரப்கள்!

nathan

இந்திய ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளும்… அதற்கான தீர்வுகளும்…

nathan

மிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புகைப்பிடிக்கும் பழக்கத்தை எப்படிப்பா நிறுத்துவது?…

sangika

உங்கள் ரேசரை தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

nathan