28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
tiehair
தலைமுடி சிகிச்சை

தெரிஞ்சிக்கங்க…கோடையில் முடி கொட்டுவது எதனால் என்று தெரியுமா…?

சிலருக்கு கோடையில் முடி அதிகம் உதிரும். உங்களுக்கு முடி அதிகம் கொட்டுதா? இப்படி கோடையில் முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக கோடையில் சருமத்திற்கு மட்டும் தான் அதிக அக்கறை காட்டுவோம், பராமரிப்புக்களையும் வழங்குவோம். ஆனால் தலையில் உள்ள முடியைப் பற்றி சிறிதும் கண்டு கொள்ளமாட்டோம்.

ஆனால் எப்போது முடி கொட்ட ஆரம்பிக்கிறதோ, அப்போது தான் அதிக கவலை கொண்டு, அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து, அதனை சரிசெய்ய முயற்சி எடுப்போம்.

கோடையில் முடி கொட்டுவதற்கான காரணத்தை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, முடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நீச்சல் குளம்

கோடையில் வெயில் அதிகம் உள்ளது என்று, பலரும் நீச்சல் குளித்தில் அதிக நேரம் செலவழிப்பார்கள். ஆனால் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் உள்ளது. இது முடியின் எதிரி. இந்த குளோரின் ஸ்கால்ப்பில் பட்டால், மயிர்கால்களை வலிமையிழக்கச் செய்து, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே நீச்சல் குளத்தில் இறக்கும் முன்னும், பின்னும் நல்ல சுத்தமான நீரில் முடியை அலசிக் கொள்ளவும்.

 

சூரியன்

சூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்திலும், முடியிலும் படுமாயின், அதனால் அதிகம் பாதிக்கப்படுவதோடு, அளவுக்கு அதிகமாக வறட்சியடைந்து, முடி உதிர ஆரம்பிக்கும். எனவே வெயிலில் செல்லும் முன், தலைக்கு ஏதேனும் தொப்பி அல்லது துணி அல்லது குடையை கொண்டு தலை முடியை மறைத்தவாறு செல்லுங்கள்.

 

ஹேர் ட்ரையர்

மற்ற காலங்களில் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவதைப் போல், கோடையில் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தினால், முடி மேலும் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும். எனவே கோடையில் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

 

கெமிக்கல்கள்

தலைக்கு ஹேர் ஜெல், ஷாம்பு போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக கெமிக்கல் அதிகம் கலந்த ஷாம்புக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள கெமிக்கலானது சூரியக்கதிர்களில் தொடர்ந்து படும் போது, அதனால் முடி உதிர ஆரம்பிக்கும்.

குறைபாடுகள்

உடலில் இரும்பச்சத்து அல்லது புரோட்டீன் குறைவாக இருந்தாலும், முடி உதிர ஆரம்பிக்கும். எனவே இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வாருங்கள்.

மன அழுத்தம்

அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டால், முடி நிச்சயம் கொட்டும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாவதைத் தடுத்து, அவ்வப்போது யோகா, தியானம், நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்ற மனதை சாந்தப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள்.

ஹேர் ஸ்டைல்கள்

கோடையில் அதிகம் வியர்ப்பதால், முடியை இறுக்கமாக கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறுக்கமாக கட்டினால், வியர்வையினால் மயிர்கால்கள் தளர்ந்து முடி அதிகம் உதிர ஆரம்பிக்கும்.

Related posts

கூந்தலை பாதுகாக்க எளிய வழிகள்

nathan

இதோ சில டிப்ஸ்… உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா? அதை சரிசெய்ய

nathan

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டுமா…..

sangika

நீண்ட வளமான கூந்தலுக்கு தேனை எப்படி பயன்படுத்தலாம்!

nathan

தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்

nathan

ஆண்களே! இதோ வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும் சில நாட்டு வைத்திய வழிகள்!

nathan

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் சீன மருத்துவம்!!

nathan

உங்க கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும் தெரியுமா?

nathan

முடி உதிர்வு எளிய வீட்டு சிகிச்சை

nathan