கோடை என்றாலே உடலுக்கு படு பேஜாராக தான் இருக்கும். சரும எரிச்சல்கள், உஷ்ணம், உடல் சூடு அதிகரிப்பது, வெளியில் சென்று வீடு திரும்புவதற்குள் வெந்து நூடல்ஸ் ஆகிவிடுவோம்
இதில் இருந்து தப்பிக்க நாள் முழுதும் தண்ணீர் குள்ளேயே குடி இருக்கலாம் போல இருக்கும். அது எல்லாம் தேவை இல்லை, கோடை வெயிலில் இருந்து தப்பித்து உடல் சூட்டை தணிக்க சில ஸ்பெஷல் குளு குளு குளியல்கள் இருக்கின்றன.
இனி அந்த ஸ்பெஷல் குளு குளு குளியல்கள் பற்றி காணலாம்…
வாழையிலை குளியல்
உடலில் உள்ள கெட்ட நீறை எல்லாம் வெளியேற்றி உடலில் மனம் பெருக மற்றும் உடல் இறுக்கம் குறைத்து நல்ல புத்துணர்ச்சி அளிக்கிறது வாழையிலை குளியல். மற்றும் இது நல்ல உறக்கத்தை தரும். உடல் பொலிவை ஏற்படுத்தி உடல் எடையையும் குறைக்க உதவும்.
வேப்பிலை குளியல்
வேப்பிலை இயற்கையிலேயே நல்ல கிருமி நாசினியாகும். குளியல் நீரில் வேப்பிலையை போட்டு குளித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். உடலில் உள்ள அனைத்து நச்சுக் கிருமிகளை அழிக்கவும் இது பயனளிக்கும். உடல் துர்நாற்றத்தை போக்கவும், தோல் வியாதிகளை குணப்படுத்தவும் இது நல்ல மருந்தாகும்.
மூலிகை குளியல்
யூகலிப்டஸ், துளசி, பெருஞ்சீரகம், சீமைச்சாமந்தி போன்றவற்றை நீரில் போட்டு குளிப்பது, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி மருந்தாகவும், உடல் வலுவினை நன்கு அதிகரிக்கவும், பொலிவை பெறவும், சரும நோய்களில் இருந்து தீர்வு காணவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது.
சூரிய குளியல்
இந்த குளியல் காலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே உடலுக்கு நன்மை பயக்கும்.
மண் குளியல்
செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம். மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும். இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை முதலிய வற்றை குறைப்பதுடன் உடல் நிறத்தை பொலிவாக்குகிறது.