தேவையானவை :
முட்டை : 4
வெங்காயம் : 2 பெரியது
சிரகத்தூள் : ¼ டீஸ்பூன்
மஞ்சள்தூள் : ஒரு பின்ச்
சாட் மசாலா : 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் : ½ டீஸ்பூன்
எண்ணெய் : 1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை கொஞ்சம் பொடியாக நறுக்கியது
மசாலா செய் முறை
· முட்டையை வேகவைத்து கொள்ளவும்
· கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தும் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதங்கியதும் கொடுக்கப்பட்ட அணைத்து மசாலா வகைகளையும் சேர்த்து வதக்கவும்
· சுருண்டு வெந்து பதமாக வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும்.
· ஃபப்ஸ் மாவில் ஆரிய கலவையை வைத்து.. அதன் மேல் வெட்டிய முட்டை வைக்கவும் தேவையான வடிவில் மடிக்கவும்
· மேலே முட்டை கலவை பூசலாம் இல்லைனா வெண்ணை தடவி வைக்கலாம்
ஃபப்ஸ் மாவு தயாரிக்க தேவையானவை :
மைதா : ½ கிலோ
பேக்கிங்பவுடர் : ¼ டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எலுமிச்சை சாறு : 1 டீஸ்பூன்
வெண்ணை : 300 கிராம்
· மைதாவில் உப்பு எழுமிச்சை சாறு 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை சேர்த்து நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
· பிசைந்த மாவை நன்கு பரவலாக உருட்டவும்.
· வெண்ணையை கொஞ்சம் இலக வைக்கவும்
· கொஞ்சம் வெண்ணெய் எடுத்து உருட்டிய மாவில் பரவலாக பூசி மாவை மடித்து (நம் புறமாக) நன்கு உருட்டவும் பின் மீண்டும் கொஞ்சம் வெண்ணை தடவி எதிர் திசை மடித்து உருட்டவும்
· இப்படி ஒரு நான்கு அல்லது ஐந்து முறை செய்தால் மாவு இளகி வரும் அந்த பதத்தில் வெண்ணெய் தடவி மடித்து ஃபிரிட்ஜ்யில் வைக்கவும் 20 நிமிடம் கழித்து எடுத்து மீண்டும் வெண்ணெய் தடவி முதல் மடித திசைக்கு எதிர் திசையில் மடித்து பிரிட்ஜ்யில் வைக்கவும்
· இப்படி ஒரு ஆறு எழு முறை செய்யவும் (வெண்ணை இருக்கும் வரை)
· இப்போ ஃபப்ஸ் செய்ய மாவு தயார்
ரொம்ப நேரம் வெளியே இருந்தா இளகி விடும்… மசாலா ரெடியா இருந்தா.. ஃபிரிட்ஜ்யில் இருந்து எடுத்த உடனே பப்ஸ் செய்து ஓவனில் வைக்கவும்… எத்தனை முறை மடித்து உருட்டுகிறோமோ அத்தனை லேயர்வரும் சாப்ட்நெஸ் கூடும்…
160 °.. 30 நிமிடம் ஓவனில் வைக்கவும்… மேற்புறம் சிவந்து வர வேண்டும் அப்படி இல்லை என்றால் கூட சற்று நேரம் வைக்கவும்.