28.9 C
Chennai
Monday, Feb 17, 2025
sl3777
சைவம்

பட்டாணி புலாவ்

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி – 1 கப்,
உரித்த பச்சைப் பட்டாணி – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
மெலிதாக நறுக்கிய நூக்கல் – 1/2 கப்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு பல் – 3,
சர்க்கரை – 1 டீஸ்பூன்.

அரைக்க…

தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
பச்சைமிளகாய் – 2,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
கொத்தமல்லித்தழை – 1/4 கப்.
எப்படிச் செய்வது?

பச்சைப் பட்டாணியை நீர் விட்டு உப்பு சேர்த்து பச்சை நிறம் மாறாமல் இருக்க அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். பாஸ்மதி அரிசியை 2 கப் நீர்விட்டு உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு, நூக்கல் இரண்டையும் உப்பு சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து வேக விடவும். அரைக்கக் கொடுத்தவற்றை நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். வெந்த நூக்கலுடன், வெந்த பட்டாணியும் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். உதிரியான சாதத்தை அதில் சேர்த்து கலக்கவும். பட்டாணி புலாவ் ரெடி.

குறிப்பு : பெரிய வெங்காயத்திற்கு பதில் நூக்கல் சேர்க்கப்பட்டுள்ளது.
sl3777

Related posts

சுவையான முருங்கைக் கீரை பொரியல்

nathan

கத்தரிக்காய் – முருங்கைக்காய் சாப்ஸ் செய்யும் முறைகள்

nathan

பனீர் 65 | Paneer 65

nathan

இட்லி சாம்பார்

nathan

தக்காளி – புதினா புலாவ்

nathan

பாலக் கிச்சடி

nathan

பாகற்காய் தக்காளிப் புளிக்கறி

nathan

கத்தரிக்காய் வதக்கல்

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு – பிரட் பிரியாணி

nathan