மோசமான வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம் காரணமாக ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. உடல்நலம் மட்டுமல்லாமல் முகப்பொலிவுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிலருக்கு இந்த பழக்கங்களால் முகத்தில் முகப்பரு ஏற்படுகிறது. சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகளும் ஏற்படுகின்றன. சில சமயம் இந்த முகப்பரு மிகவும் பெரியதாகி பார்ப்பதற்கு வினோதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இவற்றால் வலியும் அதிகமாக ஏற்படுகின்றது. இவை சில நாட்களில் சரியானாலும், முகத்தில் அடையாளத்தை விட்டுவிட்டு செல்கின்றன. இவை முகத்தின் அழகையும் கெடுத்து விடுகின்றன.
முக வடுக்களிலிருந்து நிவாரணம் பெற உங்களுக்காக ஒரு அட்டகாசமான வீட்டு வைத்தியத்தைப் பற்றி இங்கே காணலாம். இதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கரும் புள்ளிகளிலிருந்தும் வடுக்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
இது மட்டுமல்ல, உங்கள் முகமும் மிகவும் அழகாக இருக்கும். இந்த வீட்டு வைத்தியத்துக்கு கிராம்பு எண்ணெய் தான் ஆதாரம். கிராம்பு எண்ணெயின் உதவியுடன், சருமத்திற்கும் களங்கமற்ற பளபளப்பை கொடுக்க முடியும். தோல் நிபுணர்களின் கூற்றுப்படி, கிராம்பு எண்ணெய் (Clove Oil) சருமத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. வயதான அறிகுறிகளை அகற்ற கிராம்பு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
கிராம்பு எண்ணெய் முகப்பருவில் இருந்து நிவாரணம் தரும்
– ஒருவரின் முகத்தில் முகப்பரு அதிகமாக இருந்து, அதனால் பிரச்சனை ஏற்படால், கிராம்பு அந்த பிரச்சனையை வேரிலிருந்து ஒழிக்க உதவுகிறது.
– முகப்பரு பிரச்சனையை போக்க கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.
– கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவது முகத்தில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது.
– நீங்கள் விரும்பினால், கிராம்பு எண்ணெயை பாதாம் (Badam) அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
– நீங்கள் கிராம்பு எண்ணெயை மட்டும் கரும் புள்ளிகளில் பயன்படுத்துவதாக இருந்தால், ஒன்று முதல் இரண்டு சொட்டுகள் மட்டுமே தடவவும்.
சுருக்கங்களிலிருந்து நிவாரணம்
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் (Face wrinkles) மற்றும் கோடுகள் உங்களை கவலைக்கு ஆளாக்கினால், அதற்கும் கிராம்பு எண்ணெய் உங்களுக்கு உதவியாய் இருக்கும். இரண்டு சொட்டு கிராம்பு எண்ணெய் மற்றும் ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயை கலந்து முகத்தில் மசாஜ் செய்யவும். சில நாட்களில் இதன் விளைவு தெளிவாகத் தெரியும்.
முகத்தில் இயற்கையான பளபளப்பு வேண்டுமானால், கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துங்கள். இது சருமத்தை தூசி, அழுக்கு மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது, அதே போல் முகத்திற்கு நல்ல பளபளப்பையும் பிரகாசத்தையும் தருகிறது.
குறிப்பு: இந்த செய்தி பொதுவான அனுமானங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. இந்த தகவலை செயல்படுத்துவதற்கு முன், இதன் தொடர்புடைய துறையில் உள்ள நிபுணரைத் தொடர்பு கொள்ளுங்கள்.