30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
3 facemask
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சருமத்தில் சேரும் அழுக்குகளை நீக்க உதவும் ஃபேஷியல் ஸ்கரப்கள்!!!

கோடைக்காலத்தில் வெயில் அதிக அளவில் இருப்பதால், வியர்வை அதிகம் வெளியேறி, அதனால் சருமத்துளைகள் திறந்து, அதனுள் அழுக்குகள் புகுந்து, முகம் பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும்.

அதுமட்டுமின்றி, சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் இருந்தால், அவை சருமத்தை கருமையாக வெளிக்காட்டும். ஆகவே நீங்கள் வெள்ளையாக காட்சியளிக்க தினமும் ஃபேஷியல் செய்ய வேண்டும்.

அதிலும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே அன்றாடம் ஃபேஷியல் செய்து வந்தால், முகம் பொலிவோடு பிரகாசமாக மின்னும். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்றும், அவற்றைக் கொண்டு எப்படி ஃபேஷியல் செய்வதென்றும் பார்ப்போம்.

காபி தூள்
காபி தூளில் சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

ஓட்ஸ்
ஓட்ஸை பொடி செய்து, அதில் பால் மற்றும் லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்து, அந்த கலவையைக் கொண்டு, முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமம் பிரகாசமாக இருக்கும்.

பப்பாளி
பப்பாளியை மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, விரலால் மென்மையாக முகத்தை ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி
தக்காளியை மசித்து, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு தினமும் முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

க்ரீன் டீ
சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயை குளிர வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு, முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பளிச்சென்று காணப்படும்.

பாதாம்
பாதாமை ஒன்றிடண்டாக அரைத்து அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் முகம் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும்.

டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட்டில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, அதனை பிம்பிள் அல்லது முகப்பரு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், பருக்கள் அனைத்தும் மறையும்.

தயிர்
தயிரில் சர்க்கரை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், அதில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் தயிர் சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

Related posts

கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி -தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…மீசை போல் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க அருமையான வழிகள்!!!

nathan

எளிய இயற்கை அழகு குறிப்புகள்! அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா?

nathan

இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் நமது முக அழகையும் இது பாதுகாக்கிறது!…

sangika

ஃபேஸ் மாஸ்க் போடும் முன் கவனிக்க வேண்டியவை

nathan

முக அழகை கெடுக்கும் தோல் சுருக்கத்தை போக்க சில வழிகளை பார்க்கலாம்…

nathan

என்றும் இளமையுடன் வாழ என்ன செய்யலாம்?..!! இளம் வயதில் முதுமை?..

nathan

எளிமையான வழி…முகப்பருக்களை சரிசெய்ய…

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை

nathan