25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
7homeremediesforsunburntreatment
முகப் பராமரிப்பு

இதோ சில டிப்ஸ்… வெயிலில் அதிகம் சுற்றி சருமம் ரொம்ப எரியுதா?

என்ன தான் கோடைக்காலம் ஆரம்பித்தாலும், கொளுத்தும் வெயிலில் சுற்றாமல் இருக்க முடியுமா என்ன? ஆனால் அப்படி வெயிலில் அதிகம் சுற்றினால், சருமத்தில் சூரியக்கதிர்கள் தொடர்ந்து பட்டு, சருமத்தின் நிறம் சிவப்பு கலந்த கருமையாகும்.

அதுமட்டுமின்றி, சருமம் எரிய ஆரம்பிக்கும். இதற்கு சூரியக்கதிர்களால் சருமம் காயமடைந்துள்ளது என்று அர்த்தம். ஆகவே சூரியக்கதிர்களால் சருமம் பாதிக்கப்படாமல் இருக்க, சருமத்திற்கு போதிய பாதுகாப்புக்களை வழங்க வேண்டும்.

மேலும் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்ய, கீழே ஒரு சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

குளியல்

வெயிலில் சுற்றி சருமம் புண்ணாகி இருந்தால், குளிக்கும் நீரில் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குளித்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

கொரோனாவால் தலைமுடி ரொம்ப கொட்டுதா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்!கொரோனாவால் தலைமுடி ரொம்ப கொட்டுதா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்!

கற்றாழை

கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்திற்கு தடவி வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெற்று, சூரியக்கதிர்களால் பாதிப்படைந்த சருமம்

குளிர்ச்சியடையும்.

ஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? இதோ சில அற்புத வழிகள்!ஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? இதோ சில அற்புத வழிகள்!

பால்

பால் கொண்டு அன்றாடம் முகம் மற்றும் பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி ஊற வைத்து, கழுவி வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

முடி அதிகமா கொட்டுதா? முடியின் அடர்த்தி குறையுதா? இதோ அதைத் தடுக்கும் வழிகள்!முடி அதிகமா கொட்டுதா? முடியின் அடர்த்தி குறையுதா? இதோ அதைத் தடுக்கும் வழிகள்!

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் சரும அழகை அதிகரிக்க உதவும் வைட்டமின் ஈ வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இதனைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீயில் டானிக் ஆசிட் வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் குளிர்ச்சி தன்மை அதிகம் இருக்கிறது. எனவே இதனை அரைத்து முகம் மற்றும் கழுத்திற்கு மாஸ்க் போட்டு வாருங்கள்.

குறிப்பு

இருப்பதிலேயே சிறந்த நிவாரணி ‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, வெளியே வெயிலில் செல்லும் முன் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தி, நல்ல காட்டன் ஆடைகளை உடுத்தி, சருமம் வெளியே வெயிலில் அதிக நேரம் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

Related posts

தக்காளி மாதிரி தகதகனு மின்னணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன ?

nathan

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்

nathan

முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய்ப்பசையை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!

nathan

உங்க உதடு கன்னங்களில் உண்டாகும் கருமையை போக்குவது எப்படி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு,tamil beauty tips for face in tamil language,tamil beauty tips for face

nathan

தினமும் உங்கள் ச‌ருமதை பாதுகாக்கும் ஒரு சில வழி முறைகள்

nathan

பெண்களே வெள்ளையாகணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கருப்பழகை மாற்றும் சிகப்பழகு வேண்டுமா?

nathan