சருமத்திற்கு மிகவும் சிறந்த ஃபேஸ் பேக் என்றால் முல்தானி மெட்டியை பயன்படுத்தி செய்யும் ஃபேஸ் பேக் மிகவும் சிறந்தது. முகத்திற்கு முல்தானி மெட்டியை பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெயை உறிஞ்சும், தழும்புகளை நீக்கும், சரும நிறம் மேம்படும்,
பருக்களை குணப்படுத்தும், சரும நிறத்தை மேம்படுத்தும், குறிப்பாக சருமத்தில் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டது.
முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
Multani mitti face pack: 1
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு சாறு – 3 ஸ்பூன்
முல்தானி மெட்டி – 1 ஸ்பூன்
தயிர் – 1 ஸ்பூன்
செய்முறை:-
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் உருளைகிழங்கு சாறு, முல்தானி மெட்டி 1 ஸ்பூன், தயிர் 1 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் சருமத்தில் நன்கு அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு வாரத்தில் மூன்று முறை செய்து வர சருமத்தில் உள்ள அனைத்து கருமைகளும் நீங்கி சருமம் என்றும் பிரகாசமாக காணப்படும்.
Multani mitti face pack for oily skin: 2
சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க இந்த ஃபேஸ் பேக் தயார் செய்து அப்ளை செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
புதினா இலையின் சாறு – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
முல்தானி மெட்டி – 1 ஸ்பூன்
செய்முறை:-
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் புதினா சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார்.
சருமத்தை நன்றாக கழுவிய பின் தயார் செய்த ஃபேஸ் பேக்கினை சருமத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். முகத்தில் அப்ளை செய்த பின் 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருந்து பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சிப்படும். அதேபோல் சரும சுருக்கம் நீங்கி சருமம் என்றும் மென்மையாக காணப்படும்.
Multani mitti face pack for dry skin: 3
தேவையான பொருட்கள்:-
தக்காளி ஜூஸ் – ஒரு ஸ்பூன்
orange peel powder – ஒரு ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்
முல்தானி மெட்டி – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
செய்முறை:-
ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் orange peel powder, இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் மற்றும் முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் காத்திருக்கவும், பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சரும வறட்சி நீங்கும், சருமத்தில் உள்ள அனைத்து கரும்புள்ளிகளும் நீங்கும், சருமம் என்றும் பளிச்சென்று இருக்கும்.
Multani mitti face pack for dry skin: 4
தேவையான பொருட்கள்:-
காபி பவுடர் – ஒரு ஸ்பூன்
காய்ச்சாத பால் – ஒரு ஸ்பூன்
தேன் – ஒரு ஸ்பூன்
முல்தானி மெட்டி – 1/2 ஸ்பூன்
செய்முறை:-
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பின் சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
பிறகு 15 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை தொடர்ந்து செய்து வர சருமம் என்றும் பொலிவுடன், பிரகாஷமாக காணப்படும்.