இதுவரை எத்தனையோ மில்க் ஷேக்குகளை சுவைத்திருப்பீர்கள். ஆனால் வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் மில்க் ஷேக்குகளை சுவைத்ததுண்டா? இங்கு அந்த வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் கொண்டு செய்யப்படும் மில்க் ஷேக் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மில்க் ஷேக்கை காலையில் பருகினால், நாள் முழுவதும் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் உடல் எடையும் விரைவில் குறையும். சரி, இப்போது அந்த மில்க் ஷேக் ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 1 (நறுக்கியது)
வேர்க்கடலை வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பால் – 1 கப்
ஐஸ் கட்டிகள் – 4
புரோட்டின் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸரில் பாதி பால் மற்றும் வாழைப்பழ துண்டுகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வேர்க்கடலை வெண்ணெய், மீதமுள்ள பால் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அத்துடன் புரோட்டின் பவுடர் சேர்த்து, மீண்டும் அடித்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறினால், வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் மில்க் ஷேக் ரெடி!!!