26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
rdtr
முகப் பராமரிப்பு

சில அழகு டிப்ஸ் !! அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு..

சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது.

எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
rdtr
பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சருமம் சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும். இளமையோடு காட்சி தரும். சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும்.

ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவுபெறும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இயற்கை முறையில் வீட்டிலேயே முக அழகை பராமரிக்கும் வழிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…முகப்பருவை குணப்படுத்த தேங்காய் எண்ணெய் தடவுவது சரியா?

nathan

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா?

nathan

இளம்பெண்கள் அழகு தேவதைகளாக வலம் வர இதை செய்து வாருங்கள்!…

sangika

முகப் பொலிவிற்கு!

nathan

இவைகளால் தான் கரும்புள்ளிகள் வருகிறது என்பது தெரியுமா?

nathan

அடர்த்தியான புருவங்களைப் பெற சில டிப்ஸ்

nathan

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள இந்த டிப்ஸ படிங்க!…

sangika