ஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.
அடுத்ததாக நாம் சருமத்தில் ஸ்க்ரப்பிங் செய்ய போகிறோம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை சக்கரை, 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்க்ரப்பர் தயாராகிவிட்டது, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் பின் 5 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களுக்கு புத்துயிர் அளிப்பதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். தேங்காய் எண்ணெய் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் வைத்து கொள்ளும்.அடுத்ததாக சருமத்திற்கு செய்ய வேண்டும். இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு வைட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் இந்த கலவையை சருமத்தில் நன்கு அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் அதாவது 10 முதல் 15 நிமிடங்கள் வரை சருமத்தை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.முகத்திற்கு இவ்வாறு மசாஜ் செய்வதினால் சரும செல்கள் புத்துணர்ச்சியாக காணப்படும், மேலும் முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி சருமம் பட்டுப்போல் ஒளிரும்.
இறுதியாக நாம் சருமத்திற்கு இயற்கையான முறையில் ஃபேஷ் பேக் தயார் செய்ய போகிறோம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள்.அவற்றில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் ஆகியவற்றில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது ஃபேஷ் பேக் தயார் இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் கழுத்து பகுதியிலும் நன்றாக அப்ளை செய்யுங்கள் பின்பு 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையினை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம், முகத்திற்கு இது போன்று அடிக்கடி பேசியல் செய்வதினால் முகம் வெள்ளையாகவும், மென்மையாகவும், முகம் வசீகரமாக காணப்படும்.