25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p32a1
முகப் பராமரிப்பு

புத்துணர்வு தரும் ஃபேஸ் வாஷ்

கோடை துவங்கிவிட்டது. வியர்வையும், கசகசப்பும், களைப்புமாய் இருக்கும் முகம் ஃப்ரெஷ்ஷாக, சோப் பயன்படுத்துவதைவிட ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது முகத்துக்கு நல்லது. சந்தையில் குவிந்துகிடக்கும் ஃபேஸ் வாஷ்களில் சரியானதை எப்படித் தேர்ந்தெடுப்பது?

தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் ஃபேஸ் வாஷ்களை வாங்கலாம். அதிக ரசாயனங்கள் மற்றும் வாசனைகள் கலந்திருப்பதைத் தவிர்க்கவும். மிதமான ஃபேஸ் வாஷ்களே சிறந்தவை. பி.எச் (pH) அளவு 4.5 முதல் 5.5 வரை இருக்கலாம்.

எண்ணெய் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம் என ஒவ்வொரு சருமத்துக்கும் பிரத்யேகமான ஃபேஸ் வாஷ்கள் கிடைக்கின்றன.

எந்த வயதில்?
12 வயதுக்கு மேல் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு சரும மருத்துவர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் நிறைந்த சோப்பு நல்லது.

பரு பிரச்னைக்கு என்ன தீர்வு?
பருக்கள் நிறைந்த சருமத்துக்கு ஆக்னி ப்ரோன் (Acne prone) ஃபேஸ் வாஷ் சிறந்தது. பருக்கள் கொண்ட முகம் உடையவர்கள், ஸ்கரப் கீரீம்களைப் பயன்படுத்தக் கூடாது.

நல்ல தண்ணீர் எது?
குளிர்ந்த அல்லது மிதமான நீரில் முகம் கழுவுவது நல்லது. மிகவும் சூடான நீரில் முகம் கழுவக் கூடாது. அடிக்கடி நீரில் முகத்தைக் கழுவினால், எந்தவிதத் தொற்றுகளும் தூசுகளும் சருமத்தை அண்டாது.

எத்தனை முறை பயன்படுத்தலாம்?
ஒருநாளைக்கு மூன்று முறை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். முகத்தைக் கழுவிய பிறகு, சன் ஸ்கிரீன் அல்லது மாய்ஸ்சரைசர் என அவரவர் சருமத்துக்கு ஏற்ற கிரீம்களைப் பூசிக்கொண்டு வெயிலில் செல்லலாம்.

எப்படி முகம் கழுவுவது?
முகத்தை அழுத்தமாகத் தேய்க்காமல், மசாஜ் செய்வதுபோல மென்மையாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். துடைக்கும்போதும், துணியால் முகத்தை ஒற்றி எடுப்பதே நல்லது.

வியர்வைத் தொல்லைக்குத் தீர்வு
வியர்வை, துர்நாற்றம் பிரச்னை உள்ளோர் ஆன்டி பாக்டீரியல் சோப்பைப் பயன்படுத்தலாம். சருமத்தில் நல்ல கிருமிகளும் இருக்கும் என்பதால், வீரியம் மிக்க ஃபேஷ் வாஷ் மற்றும் சோப்களைத் தவிர்ப்பது நல்லது. நல்ல கிருமிகள் நீங்கிவிட்டால், கெட்ட கிருமிகள் அதிகம் பரவி, சருமத்தைப் பாதிக்கலாம்.

வெளியில் சென்றுவிட்டு வருபவர்கள், முதலில் க்ளென்சரால் முகத்தில் உள்ள அழுக்கு, தூசுக்களை நீக்க வேண்டும். க்ளென்சர் அழுக்கு, தூசை நீக்குமே தவிர, முகத்துக்குப் புத்துணர்வு தராது. மேலும், வழவழப்பும் முகத்தில் ஒட்டி இருக்கும் என்பதால், க்ளென்சிங் செய்த பிறகு, ஃபேஸ் வாஷ்கொண்டு முகத்தைக் கழுவிவிட வேண்டும்.

சருமப் பிரச்னைக்கு!
தேமல், சொரி, சிரங்கு, படை போன்ற சருமப் பிரச்னைகள் சிலருக்கு இருக்கும். ஒவ்வொரு சருமப் பிரச்னையும் குணமடைய, சில மாதங்கள் பிடிக்கும்.

ஸ்டீராய்டு கலந்த மருந்தைப் பயன்படுத்தினால், பிரச்னை தற்காலிகமாகக் குணமாகும். ஆனால், பின்னர் வீரியமிக்க பிரச்னையில் கொண்டுவிடக்கூடும்.

சுத்தம் மிகவும் அவசியமானது. தினமும் இரண்டு வேளை குளிப்பது நல்லது. பயன்படுத்தும் உடை, காஸ்மெட்டிக்ஸ், துண்டு, கைக்குட்டை, சோப், சீப்பு போன்ற எதையும் மற்றவர்களுடன் பகிர்தல் கூடாது. உள்ளாடைகள், உடைகளைத் தனியாகத் துவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும்.

பொடுகு இருந்தால், ஸ்கால்ப்பிலிருந்து சிகிச்சையைத் தொடங்கும் நிலை ஏற்படும். இதற்கான பிரத்யேக சிகிச்சைகள் இருப்பதால், சருமப் பிரச்னைகளைக் கண்டு பயம் தேவை இல்லை.
p32a

Related posts

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஷியல்

nathan

ஏன் உங்களின் கண்ணிமை முடிகள் உதிர்கின்றன? அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

nathan

முகம் மிகவும் மிருதுவாக எளிய அழகு குறிப்புகள்!!

nathan

10 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் தழும்புகள், சுருக்கங்களைப் போக்கும் அற்புத மாஸ்க்!

nathan

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…

sangika

வெயில் கொடுமை தாங்கமுடியலையா? அப்ப இத படிங்க!

nathan

பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்

nathan

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan

உங்க முகத்தில் அசிங்கமாக மேடு பள்ளங்கள் உள்ளதா? அப்ப இத படியுங்க…………

nathan