26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
fyuutf
தலைமுடி சிகிச்சை

தழையத் தழைய கூந்தலுடன் வளைய வரும் பெண்களை பார்க்கும் போது, பொறாமையாக இருக்கிறதா?

வெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம்! வெந்தயக் கீரையின் சுவையும் மணமும் உங்களுக்கு தெரியும். அழகையும் குளிர்ச்சியையும் அது அள்ளித் தரும் என்பது தெரியுமா? தழையத் தழைய கூந்தலுடன் வளைய வரும் பெண்களை பார்க்கும் போது, பொறாமையாக இருக்கிறதா? கவலையை விடுங்கள்.

தலைமுடி யின் வளர்ச்சியைத் தூண்டும் அற்புத மருந்து வெந்தயக் கீரையில் இருக்கு!

2 கட்டு வெந்தயக் கீரை எடுத்து, காம்பை நீக்கிவிட்டு கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை சீடைக்கு உருட்டுவதுபோல உருட்டி, 2 நாள் வெயிலில் காய வையுங்கள் (உருண்டை உடைந்தாலும் பரவாயில்லை). கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி, மிதமான சூட்டில் இறக்கி அதில் இந்த உருண்டைகளைப் போடுங்கள். 10 நாட்கள் நன்றாக ஊறவிட்டு, வடிகட்டுங்கள். இந்த தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக்கொள்ளுங்கள். உடம்பு உஷ்ணம் குறைந்து தலைமுடி நீண்டு வளரத்தொடங்கும்.
fyuutf
தோலை பளபளப்பாக்கவும் இந்தத் தைலம் உதவும். இதனுடன், 5 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து உச்சி முதல் பாதம் வரை சூடு பரக்க தேய்த்து, ஐந்து நிமிடம் கழித்து பயத்தமாவு போட்டுக் குளித்தால்…

தோலின் வறட்சி நீங்கி, பளபளவென மின்னும். உடம்புக்கு அது குளுமையும் தரும். சிலருக்கு மூக்கின் மேல் சொரசொரப்பும், கரும் புள்ளிகளும் தோன்றி முக அழகைக் கெடுத்துவிடும். இதற்கும் தீர்வு இருக்கிறது வெந்தயக் கீரையில். சிறிது வெந்தயக் கீரையுடன் தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இப்படிச் செய்துவந் தால், புள்ளிகளும் சொரசொரப்பும் காணாமல் போய் மூக்குத்தி இல்லாமலே மூக்கு டாலடிக்கும்.
hjfhjgf
முகத்தில் கரும்புள்ளியும், அம்மை தழும்பும் மாறாத வடுக்களை ஏற்படுத்திவிடும். இந்த வடுக்களுக்கு ‘குட்பை’ சொல்ல வைக்கிறது வெந்தயக் கீரை. வெந்தயக் கீரையை அரைத்து விழுதாக்கி, ஒரு துணியில் கட்டிவிடுங்கள். சாறு இறங்கிவிடும். இந்தச் சாறு ஒரு டீஸ்பூனுடன், 2 சொட்டு தேன் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்து, கழுவுங்கள். சில தடவை இப்படி செய்தாலே, இருந்த இடமே தெரியாமல் வடு மறைந்துவிடும். கண் இமைகளில் முடி உதிர்ந்தால் அழகான கண்களும் ‘டல்’லாக தெரியும். முடி கொட்டுவதை நிறுத்தி படபடக்கும் இமைகளைத் தருகிற ‘பளிச்‘ டிப்ஸ் இது. வெந்தயக் கீரையை அரைத்து ஜூஸாக்குங்கள். இந்த ஜூஸில் பஞ்சைத் தோய்த்து இமைகளின் மேல் தடவுங்கள். 5 நிமிடங்கள் கழித்து ‘ஜில்’ தண்ணீரில் கழுவி விடுங்கள். முடி உதிர்வது நின்று கருகருவென இமை முடிகள் வளரத் துவங்கும். பொம்மையின் கண்கள் போன்ற அழகான கண்கள் கிடைக்கும்.

கே & ப ‘எனக்கு 50 வயது. மாநிறமாக இருப்பேன். ஆனால், இப்போது கண்களின் கீழ் கருவளையமும், இரண்டு கன்னங்களிலும் அடை போல கருமையும், கண்ணாடி போடுவதால் மூக்கின் இரு பக்கமும் தழும்புகளும் வந்து ரொம்ப கறுப்பாக தெரிகிறேன். மீண்டும் முகம் பழைய பிரகாசத்தைப் பெற ஆலோசனை கூறுங்கள்.’

பொதுவாகவே, ஐம்பது வயதை நெருங்கும்போது, தோல் வறண்டுவிடும். அந்த சமயத்தில், உடம்பை எண்ணெய்ப் பசையுடன் வைத்திருப்பது மிக அவசியம். உங்கள் முகம், மாசு மரு இல்லாத பளிங்கு போல் பிரகாசிக்க இதோ சில சிகிச்சை முறைகள்…

கசகசா 50 கிராம், வெள்ளரி விதை 100 கிராம் இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். அரை கிலோ நல்லெண்ணெயில் இந்த விழுதைப் போட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடுங்கள். எண்ணெய் தீயாத அளவுக்கு பார்த்து கிளறி இறக்கி மூடி வையுங்கள். 3 வாரம் கழித்து எண்ணெய் நன்றாக தெளிந்துவிடும். இந்த எண்ணெயை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் முகம் பளிச்சென்று ஆகும். தோல் மிருதுவாகி, கண்ணின் கருவளையமும் மறைந்துவிடும். உலர்ந்த பொன் ஆவாரம்பூவை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் ஒரு டீஸ்பூனுடன், கடலை மாவு அரை டீஸ்பூன் கலந்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் இதைச் செய்துவர, 15 நாட்களில் கன்னத்தில் ஏற்பட்ட கருமையும், புள்ளிகளும் மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும். இரவு தூங்கப் போகும் முன், 1 டீஸ்பூன் முல்தானிமட்டி பவுடரை பாலில் கலந்து, கண்ணாடியினால் ஏற்பட்ட தழும்பு பகுதியில் தடவுங்கள். காலையில் முகத்தை கழுவுங்கள். இரண்டே வாரத்தில் கறுப்புத் தடம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மிருதுத்தன்மையை கொடுப்பதில் கீரை ஜூஸ§க்கு ஈடு இணையில்லை. துளசி, வெந்தயகீரை, கற்பூரவல்லி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து, வாரம் ஒரு முறை 5, 6 இலை களை கைகளால் கசக்கி, அந்த சாறை முகத்தில் தடவுங்கள். முகம் மிருதுவாகி, பிரகாசிக்கும்.’

Related posts

தலைமுடி இல்லை என்று இனி கவலைப்பட தேவையில்லை!சூப்பர் டிப்ஸ்….

nathan

சுருள் முடியை மெயின்டெய்ன் செய்ய

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…உங்கள் முன் தலையில் ஏற்படும் வழுக்கையை சரிசெய்வதற்கான சில வழிகள் இதோ!

nathan

இளநரையை போக்கும் மருதாணி:-சூப்பர் டிப்ஸ்

nathan

எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

க்ரே முடியை இயற்கையாகவே கருமையாக்க உதவும் 5 கருப்பு தேநீர் ரெசிப்பி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

nathan

தலைமுடி பராமரிக்கும் முறை

nathan

உங்க கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும் தெரியுமா?

nathan

சில் கிளைமேட்டில் கூந்தல் பராமரிப்பு

nathan