தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
——–
குடமிளகாய் 3
(பச்சை,மஞ்சள் சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)
Spring onion 1 கட்டு
வெங்காயம் 2
Jalapeno slices 5
——–
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
தக்காளி பேஸ்டு 1/2 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
——
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
—–
செய்முறை:
பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குடமிளகாய்,வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
spring onion ஐ பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
Jalapeno slices ஐ அப்படியே போடலாம்.
——
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய்,spring onio,jalapeno slices மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது,சீரகம்,தக்காளி பேஸ்டு,காரப்பொடி எல்லாம் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல் வைக்கலாம்.