hand lifts beautiful hands
சரும பராமரிப்பு

கை மூட்டு, கால் மூட்டு அழகாகவும் மென்மையாகவும் இருக்க‍ சில எளிய குறிப்புக்கள்

கை மூட்டு, கால் மூட்டு அழகாகவும் மென்மையாகவும் இருக்க‍ சில எளிய குறிப்புக்கள்
முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் மெனக்கெடுகிறோம்.

ஆனால், கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகள் கறுப்பாய் கரடு தட்டிக்காணப்படும். நம்கண்களுக்கு அதிகம் தெரி யாத பகுதி என்பதால், இதற்குப் பலரும் முக்கியத் துவம் கொடுப்பது இல்லை. நீர்ச்சத்துக் குறைவால் சருமம் வறண்டுபோவதால், இறந்த செல்கள் தேங்கி இப்பகுதிகள் கறுத்துவிடுகின்றன. அமர்வது , எழுவது, படுப்பது போன்ற அன்றாட செயல்களின் போது, கை மூட்டு, கால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறோம். இதனால், செல்களுக்கு முறையான நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்கா மல் போவதாலும், இப்பகுதிகள் கறுப்பாக மாறி விடுகின்றன. மூட்டுத்தோல்பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங் களைச் செய்தாலே போதும்.

நீர், உணவு
தினமும் இரண்டு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தவிர, நீர்ச் சத்துகொண்ட மோர் மற்றும் இளநீரைக் குடிக்கலாம். வைட்டமின் ஏ, இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள், காய்கறிகளைச்சாப்பிட வேண்டு ம். குறிப்பாக கேரட், உருளைக்கிழங்கு, பப்பாளி, தர் பூசணி, பூசணிக்காய், வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு போன்றவை சாப்பிடவும். தினமும், ஒரு கப் கீரை எடுத்து க்கொள்ளவும். தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சருமத்தில் கருமை மறைந்து, பளபளப்பு கிடைக்கும்.

மசாஜ்
மூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத் தை சீர்செய்ய முடியும். ரத்த ஓட்டம் சீரானால் கறுப்புத் திட்டுக்கள் மறையும். தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 – 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய் தால், நல்ல பலன் தெரியும். ஆலிவ் எண்ணெயையும் பயன்படு த்தலாம்.

மஞ்சள்
இறந்த செல்களை உடனடியாக அகற்றும் திறன் மஞ்சளு க்கு உண்டு. மஞ்சளுடன், பசும்பால் சேர்த்து, மூட்டுப் பகுதியில் தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் காயவிட வேண்டும். பின்னர், சோப் பயன்படு த்தி, மூட்டு பகுதியைக் கழுவ வேண்டும். தினமும் இதனைச் செய்து வந்தாலே, சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.

கற்றாழை ஜெல்
இது சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும். கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை
பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-30 நிமிடங்கள் அப்படியேவிட வேண்டும். பின்னர், தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். தேன் அதிக அளவு சேர்த்து, தினமும் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.

கடலைமாவு – தயிர் கலவை
கடலை மாவு, தயிர் சம அளவு கலந்து, மூட்டுப் பகுதியில் தடவி 5 – 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவலாம். கடலை மாவுக்குப் பதில் பாதாம் பருப்பை அரைத்தும் பயன்படுத்தலாம்.

ரோஜா இதழ் – முல்தானி மட்டி
ரோஜா இதழை காயவைத்துப் பொடித்துக் கொள்ள வும். இதனுடன், முல்தானிமட்டிப்பொடி சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டுக் கலக்கி பேஸ்ட் ஆக்கவும். இதைக் கறுப்புத் திட்டுகள் இருக்கும் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், மூட்டுகள் பளபளப்பாகும்.
hand lifts beautiful hands

Related posts

ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

nathan

சருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்

nathan

சரும பிரச்சனைகளைத் தடுக்க வெந்தயத்தைப் பயன்படுத்துவது எப்படி?சூப்பரா பலன் தரும்!!

nathan

உங்களுக்கு கருப்பா இருக்கும் சருமத்தை வெள்ளையாக்கணுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

வறண்ட சருமப் பிரச்சனையா? இதோ இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்….

nathan

உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வசிகரத்தை அள்ளித் தரவல்ல ஆரஞ்ச் பழங்களின் அழகு டிப்ஸ்

nathan

பெண்களே உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா?இதோ எளிய நிவாரணம்

nathan