22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
அழகு குறிப்புகள்முகப்பரு

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை

beauty_leadசிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் இருக்கும், கைபட்டாலே எரிச்சலும், முகத்தை பார்த்தாலே வேதனை மட்டும் தான் மிஞ்சும்.

இவர்களுக்கு ஏற்ற அருமையான பொருள் தான் வேப்பிலை.

* ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். பிறகு, பருக்களின் மீது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தி எடுங்கள்.

* வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால் சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

* இந்த வேப்பிலை நீரை காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது துடைத்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

* வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து கொள்ள வேண்டும்.

இதனை முகத்தில் தடவ ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும், இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.

* வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி இது பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

Related posts

முகப்பரு, விஷக்கடி, சருமநோய் என சகல பிரச்சனைகளையும் போக்கும் வியப்பூட்டும் திருநீற்றுப் பச்சிலை!

nathan

பொலிவான சருமத்தை எளிதில் பெற – Ingredients for a clear skin

nathan

சீனா எப்போது எப்படி கொ ரோ னாவை பரப்பியது தெரியுமா? வெளிப்படையாக போட்டு உடைத்த சீன நாட்டவர்!

nathan

நீங்கள் நெஞ்சு சளியால் மிகவும் அவதி படுகிறீர்களா ! பாட்டி வைத்தியத்தை உடனே செய்யுங்க !

nathan

இயற்கை குறிப்புகள்…!! சருமத்தை இளமையுடனும் பொலிவுடனும் வைக்க உதவும்

nathan

முகப்பருவிலிருந்து விடுதலை பெற……

nathan

வறண்ட சருமமோ, எண்ணெய் பசை சருமமோ கவலை வேண்டாம்..சமைக்கும் பொருட்களே நம் சருமத்தை பாதுகாக்கின்றன…

sangika

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

nathan

அழகு ,கன்னத்தின் அழகு அதிகரிக்க..,BEAUTY INTAMIL

nathan