முட்டைக்கோசு புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களில் நிறைந்துள்ளது. தவறாமல் சாப்பிடுவதால் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை முற்றிலுமாக நிறுத்த முடியும்.
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைக்கோஸை ஜூஸ் சாப்பிட்டு வந்தால், அல்சரை குணமாக்கும். அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
முட்டைக்கோசில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும்.
மேலும், முட்டைக்கோசு மெனோபாஸ் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இழப்புகளை ஈடுசெய்யும். நரம்புகளை பலப்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. முட்டைக்கோஸை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.
இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.
குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும்போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்
முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.