24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
30
கார வகைகள்

சோயா தானிய மிக்ஸர்

என்னென்ன தேவை?

சோயா தானியம் – 1/4 கப்,
கடலைப் பருப்பு – 1/4 கப்,
பயத்தம் பருப்பு – 1/4 கப்,
பச்சைப் பயறு – 1/4 கப்,
வெள்ளை பட்டாணி – 1/4 கப்,
வேர்க்கடலை – 6 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை – 6 டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு – சிறிதளவு,
பாதாம் பருப்பு – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிது,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

தானியங்களை 6 மணி நேரம் தனித்தனியே ஊற வைக்கவும். ஊறியதும் வடிகட்டி, ஒரு காய்ந்த துணியில் உலர விடவும். தண்ணீர் சிறிதும் இருக்கக் கூடாது. எண்ணெயை சூடாக்கி ஒவ்வொரு தானியத்தையும் பொரித்தெடுக்கவும். அதன்பின் எண்ணெயில் வேர்க் கடலை, பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம், கறிவேப்பிலையை ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து குலுக்கி காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். மாலை நேர ஸ்நாக்ஸாக டீ அல்லது காபியுடன் சாப்பிடலாம்.
30

Related posts

வெங்காய சமோசா

nathan

பூண்டு முறுக்கு

nathan

சுவையான பீட்ரூட் பக்கோடா

nathan

பருத்தித்துறை வடை

nathan

தேங்காய் முறுக்கு

nathan

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

சோயா கட்லெட்

nathan

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

sangika

ருசியான அவல் கார பொங்கல்!….

sangika