30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
beauty
முகப் பராமரிப்பு

முக வசீகரம் பெற

குங்குமப்பூ – 10 கிராம்

ரவை – 30 கிராம்

வாதுமை பிசின் – 25 கிராம்

இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக அதாவது 2 கிராம் அளவு எடுத்து தட்டி உலரவைத்து தேவையானபோது அந்த வில்லைகளை எடுத்து பால் ஏடு அல்லது தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் வசீகரமாகும்

முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற

கசகசாவை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து நன்றாக அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைந்து முகம் பளிச்சிடும்.

பட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற

சிறிதளவு பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தபின் முகத்தைக் கழுவி வந்தால் உங்கள் முகம் பட்டுபோன்று மென்மையாக தோற்றமளிக்கும்.

· சிலருக்கு அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் முகத்தில் இருந்துகொண்டேயிருக்கும். இவர்கள் தினமும் புதினா இலையின் சாற்றை அந்த தழும்புகளின் மீது தடவி வந்தால் தழும்புகள் விரைவில் மாறும்.

· சிலர் புருவம் அடர்த்தியற்று இருக்கும். இவர்கள் புருவத்தின் மீது சிறிது விளக்கெண்ணெயை தடவி வந்தால் புருவம் கருகருவென்று அழகாக காட்சியளிக்கும்.

· சிலருக்கு கூந்தல் வளர்ச்சியின்றி காணப்படும். இவர்கள் தேங்காய் எண்ணெயுடன் சிலதுளி விளக்கெண்ணெய் சேர்த்து தினமும் தடவி வந்தால் கூந்தல் நீண்டு வளரும். கருகருவென்றும் தோற்றமளிக்கும்.beauty

Related posts

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி…!!!

nathan

வீட்டிலேயே பிளீச் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா தேனை முகத்தில் தடவலாமா?… தடவினா எனன ஆகும்?

nathan

கண்களின் அழகை பராமரிப்பதில் இவ்வளவு நன்மைகளா..! இத படிங்க!

nathan

ஆண்களே நீங்களும் வெள்ளையாக சூப்பர் டிப்ஸ்..!

nathan

இந்த எண்ணெய்யை ஒரு சில பொருளோடு சேர்த்து எப்படி பயன்படுத்தி பருக்களின் வடுவை போக்க !

sangika

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளையங்களைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க… இயற்கையான முறையில் பப்பாளி ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி…?

nathan