29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
10 1433919471 ridge gourd poriyal
சைவம்

நீரிழிவு நோயாளிகளுக்கான… பீர்க்கங்காய் பொரியல்

பீர்க்கங்காய் நீரிழிவு நோய்களுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, இரத்த சோகை உள்ளவர்களுக்கும் நல்லது. இந்த பீர்க்கங்காயை சட்னி, மசாலா, குழம்பு, பொரியல் என்று பலவாறு சமைத்து சாப்பிடலாம். இங்கு அதில் பீர்க்கங்காய் பொரியலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பீர்க்கங்காய் பொரியலானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த பீர்க்கங்காய் பொரியலின் செய்முறையைப் பாப்போமா!!!


10 1433919471 ridge gourd poriyal
தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் – 2 (தோலுரித்து, பொடியாக நறுக்கியது)
ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 3-4 பற்கள்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் பீர்க்கங்காயை சேர்த்து நன்கு 2-3 நிமிடம் வதக்கி, பின் உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மசாலாக்கள் காயுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும்.

அடுத்து, அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு பிரட்டி, 10-15 நிமிடம் மூடி வைத்து இறக்கினால், பீர்க்கங்காய் பொரியல் ரெடி!!!

குறிப்பு:

இந்த பொரியல் செய்யும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஏனெனில் பீர்க்கங்காயை வேக வைக்கும் போது, அதுவே அதிக அளவில் நீரை வெளிவிடும்.

Related posts

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலு மட்டர் சப்ஜி

nathan

புதினா சாதம்

nathan

மாங்கா வத்தக் குழம்பு

nathan

சுவையான தீயல் குழம்பு

nathan

சுரைக்காய் கூட்டு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பிரியாணி

nathan

நார்த்தங்காய் சாதம்

nathan

தேங்காய் பால் பிரியாணி

nathan

வாழைப்பூ பொடிமாஸ்

nathan