22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
21 1445422479 6 beetrootjuice
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்வதைத் தடுக்கும் பீட்ரூட் ஹேர் மாஸ்க்!!!

மாசு நிறைந்த சுற்றுச்சூழல் மற்றும் மன அழுத்தத்தினால் பலருக்கும் ஏற்படும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இப்படி தலைமுடி உதிர்வதாலேயே பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே முடி உதிர ஆரம்பித்தால், அதனை சரிசெய்யும் முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், வழுக்கைத் தலை தான் ஏற்படும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க எத்தனையோ இயற்கை வழிகள் உள்ளன. அதில் பலருக்கும் நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெங்காயம் போன்றவற்றைக் கொண்டு பராமரிப்பது பற்றி தான் தெரியும். ஆனால் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் பீட்ரூட்டைக் கொண்டு கூட முடி உதிர்வதைத் தடுக்கலாம் என்பது தெரியுமா?

இங்கு பீட்ரூட்டைக் கொண்டு எப்படி தலைமுடி உதிர்தலுக்கு தீர்வு காண்பது என்று காண்போம்.

பீட்ரூட் ஹேர் மாஸ்க்

பீட்ரூட் இலைகளை எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க விட்டு, பின் நீரை வடிகட்டி விட்டு, இலைகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் ஹென்னா சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரம் 4 முறை செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்திருப்பதை நன்கு காணலாம்.

சத்துக்கள்

பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள், தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. இச்சத்துக்கள் தான் மயிர் கால்களை வலிமையாக்கி, அதன் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றைக் கொண்டு ஹேர் பேக் போடும் போது, முடிக்கு நல்ல பாதுகாப்பு கிடைத்து, முடியும் பிரகாசமாக இருக்கும்.

சருமத்துளைகளை இறுக்கும்

பீட்ரூட் கொண்டு ஹேர் பேக் போடும் போது, ஸ்கால்ப்பில் உள்ள சருமத் துளைகளை இறுக்கப்பட்டு, முடி உதிர்வதைத் தடுக்கிறது.

பொட்டாசியம் அதிகம்

பொதுவாக உடலில் பொட்டாசியம் குறைபாடு இருந்தால், முடி உதிர ஆரம்பிக்கும். ஆனால் பீட்ரூட்டில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே இதனைக் கொண்டு முடியைப் பராமரிக்கும் போது, முடி உதிர்வது குறையும்.

பீட்ரூட் ஜூஸ்

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும், முடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

21 1445422479 6 beetrootjuice

Related posts

தலை முடி வளர இயற்கை மருத்துவங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! இளநரை ஏற்படுவதை தடுப்பதற்கான வழிகள்…!!

nathan

தெரிஞ்சிக்கங்க… நீங்களே அறியாமல் உங்கள் முடிக்குச் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா?

nathan

எளிமை… வலிமை… கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை!

nathan

இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…அதுவும் இயற்கையான முறையில்..முடி சரசரனு வேகமா வளர..

nathan

வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இந்த நேச்சுரல் ஷாம்பு யூஸ் பண்ணுங்க…

nathan

ஆலிவ் எண்ணெயா அல்லது தேங்காய் எண்ணெயா? தலை முடிக்கு சிறந்த்து எது?

nathan

பொடுகை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan

இளநரைக்கான வீட்டு சிகிச்சை

nathan