28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
ld482
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! வெயியில் இருந்து சருமத்தை காக்க தர்பூசணி ஃபேஸ் பேக்

தர்பூசணியை அரைத்து அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

 

 

 

சருமத்தில் முதுமை தோற்றத்தை தரும் சுருக்கங்கள் அதிகம் இருந்தால் அதனை போக்க தர்பூசணி பெரிதும் உதவியாக இருக்கும். தர்பூசணி பழத்தை அரைத்து அத்துடன் அவகோடோவை மசித்து சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி சுருக்கங்கள் மறையும்.

 

நார்மல் சருமத்திற்கு :

 

தேவையான பொருட்கள் :

 

தர்பூசணி சாறு – 1 ஸ்பூன்

ஆலிவ் ஆயில்

நீங்கள் உபயோகிக்கும் கிரீம் ஏதாவது ஒன்று சிறிதளவு

முட்டையின் மஞ்சள் கரு

 

செய்முறை :

 

மேலே சொன்ன அனைத்தையும் ஒன்றாக கலந்து முகம், கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதை 2 நாட்களுக்கு ஒரு முறை செய்து வர வேண்டும். வெயிலில் வெளியில் சென்று வந்த பின் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு :

 

தர்பூசணி ஜூஸ் – 1 ஸ்பூன்

முட்டையின் மஞ்சள் கரு

 

செய்முறை :

 

இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் கழுவி விடவும். இது சருமத்திற்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்கும்.

Related posts

அடர்த்தியான புருவம் கிடைக்கனுமா? தூங்கப் போறதுக்கு முன்னாடி இத செய்யுங்க.

nathan

கறுப்பா இருக்கீங்களா? கவலைபடாதீங்க

nathan

உங்க உதடுகள் கருமையா? அப்ப இத படிங்க!

nathan

முகம் பட்டுப்போல் பளபளப்பாக இவற்றை செய்து வாருங்கள்…

sangika

பெண்களே வயதானாலும் இளமையாக காட்சியளிக்க சில டிப்ஸ்…

nathan

மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

nathan

ஹீரோயின் மாதிரி உங்க முகம் பொலிவா பிரகாசமா மின்னணுமா?

nathan

வெயிலில் அலைந்து முகம் சோர்வாக உள்ளதா?

nathan

மில்க் கிரீம் மூலம் நாம் நமது சருமத்தை ஜொலிக்கச் செய்யலாம். இதன் பயன்பாடு இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது.

nathan