DSC02934
இனிப்பு வகைகள்

குலோப் ஜாமுன்

தேவையான பொருட்கள்:
மைதா – அரை கிலோ
மில்க் மெய்ட் – ஒரு டின்
நெய் – 100 கிராம்
சீனி – ஒரு கிலோ
சோடா உப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க
ஏலக்காய் – 6
உப்பு – கால் தேக்கரண்டி

செய்முறை :
* மைதாவை சலித்துக் கொள்ளவும். அதனுடன் சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து, நெய்யை உருக்கி ஊற்றவும். ஒரு கரண்டியால் ஆறும் வரை மாவுடன் நெய் சேரும்படி நன்கு கலக்கவும். பின் மில்க் மெய்ட் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் சீனி, நசுக்கிய ஏலக்காய் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
* அரை மணி நேரம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
* வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* பொரித்த உருண்டைகளை சீனிப்பாகில் போட்டு இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.DSC02934

Related posts

அட்டகாசமான மைசூர் பாக்

nathan

வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி..?

nathan

தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி

nathan

மில்க் ரொபி.

nathan

பன்னீர் பஹடி

nathan

கடலை உருண்டை

nathan

பால் கொழுக்கட்டை

nathan

ரவா லட்டு

nathan

நுங்குப் பணியாரம்

nathan