24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
22 1445493921 6 oily skin
முகப் பராமரிப்பு

முகத்தில் எண்ணெய் வழியுதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி கடைகளில் கெமிக்கல் கலந்த டோனர்கள் இருப்பதால், பலரும் சருமத்திற்கு அதைப் பயன்படுத்துவதில்லை

உங்களுக்கு இயற்கையான டோனர்கள் வேண்டுமெனில், தொடர்ந்து படியுங்கள். சருமத்திற்கு எப்போதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். எனவே உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இந்த நேச்சுரல் டோனர்களைப் பயன்படுத்துங்கள்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, காட்டனில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

புதினா

சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென்று இருக்கும்.

வெள்ளரிக்காய்

மற்றும் தயிர் வெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.

ஐஸ் நீர்

ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதைத் தடுக்கலாம்.

தக்காளி ஜூஸ் மற்றும் தேன்

தக்காளி சாறு மற்றும் தேனை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகம் எண்ணெய் பசையின்றி பளிச்சென்று இருக்கும்.

22 1445493921 6 oily skin

Related posts

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

nathan

உங்களுக்கு தெரியுமா அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா…

nathan

பெண்களே தூங்கி எழும்போது அழகியாக மாற வேண்டுமா?

nathan

முக அழகிற்கு கரித்தூளைப் பயன்படுத்தலாம்

nathan

உங்களுக்கு மூக்கு சுத்தி தோல் உரியுதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்…

nathan

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

nathan

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..

nathan

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களைப் போக்குவது எப்படி?

nathan

புத்துணர்ச்சி தரும் வெள்ளரி ஃபேஸ் பேக்

nathan