கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பலர் தயிரை அதிகம் உணவில் சேர்ப்பார்கள். அதிலும் பிரியாணி செய்தால், நிச்சயம் அனைவரது வீட்டிலும் ரெய்தா செய்வார்கள். அத்தகைய ரெய்தாவில் பெரும்பாலும் வெங்காய ரெய்தா தான் செய்வார்கள். ஆனால் இப்போது பசலைக்கீரையை கொண்டு எப்படி ரெய்தா செய்வதென்று பார்க்கப் போகிறோம்.
இந்த ரெசிபி மிகவும் ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையானதும் கூட. மேலும் இங்கு அந்த ரெசிபியின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
Palak Raita Recipe For Summer
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை – 1/2 கப்
கெட்டியான தயிர் – 1 1/2 கப்
பச்சை மிளகாய் – 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 சிட்டிகை
மிளகு தூள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பசலைக்கீரையை நன்கு கழுவி, பின் அதனை கொதிக்கும் சுடுநீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து, அதனை வெளியே எடுத்து, பொடியாக நறுக்க வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் தயிரை ஊற்றி, அதில் உப்பு, சர்க்கரை, பச்சை மிளகாய் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் நறுக்கிய பசலைக்கீரையை போட்டு மீண்டும் நன்கு கலந்து, அதனை 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் நன்கு ஊற வைத்து, பின் பரிமாறினால், பசலைக்கீரை ரெய்தா ரெடி!!!