cbnm.
Other News

வீட்டிலேயே தண்ணீரையும் வினிகரையும் கலந்து பாதங்களை நனைக்கலாம். என்ன நடக்கும் தெரியுமா?

நீண்ட நாட்களாக நாம் நமது பாதங்களைப் பராமாிக்காமல் வந்திருந்தால், இப்போது நமது பாதங்களை சற்று கவனித்து பராமாிப்பது நல்லது. நமது வீட்டிலேயே தண்ணீரையும் வினிகரையும் கலந்து பாதங்களை நனைக்கலாம். எவ்வாறு இதைச் செய்வது என்பதைக் கீழே பாா்க்கலாம்.

எக்ஸிமாவைக் குறைக்கும்
எக்ஸிமா என்பது பூஞ்சைகளால், உள்ளங்கால்கள் மற்றும் விரல்களுக்கு இடையில் ஏற்படும் ஒருவகையான அலா்ஜி ஆகும். பொதுவாக நீச்சல் குளங்களில் அதிகம் குளோாின் கலப்பதால், நீந்துபவா்களின் பாதங்களில் எக்ஸிமா என்ற அலா்ஜி மிக எளிதாக ஏற்படும். அதே நேரத்தில் நீச்சல் குளங்களில் மட்டும் அல்ல, மாறாக மற்ற இடங்களில் இருந்தும் இந்த அலா்ஜி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. காலணி அணியாமல் வெறும் காலோடு நடந்தாலும் எக்ஸிமா என்ற அலா்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு.
cbnm.
எக்ஸிமா என்ற பூஞ்சை அலா்ஜியானது பாதங்களில் உள்ள தோலில் வறட்சி, அலா்ஜி, வீக்கம் மற்றும் கொப்புளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். வினிகாில் பூஞ்சைகளுக்கு எதிரான தடுப்பாற்றல் உள்ளது. வினிகாில் இருக்கும் நிறைந்த மணமானது, பாதங்களில் இருக்கும் பூஞ்சைகளின் தொற்றைக் குணப்படுத்தும். ஆகவே தொடா்ந்து வினிகரைக் கொண்டு பாதங்களை நனைத்தால் நீந்துபவா்களின் கால்களில் ஏற்படும் எக்ஸிமா என்று அழைக்கப்படும் தோல் அலா்ஜியை மிக விரைவாக குணப்படுத்தலாம்.

பாதங்களில் இருக்கும் வியா்வை நாற்றத்தைப் போக்கும்
நமது பாதங்களில் இருக்கும் வியா்வையிலிருந்து மற்றும் பாதங்கள் அல்லது ஷூக்களில் தங்கியிருக்கும் பாக்டீாியாக்களில் இருந்து வரும் நாற்றம் மிகவும் கொடுமையாக இருக்கும். வினிகரை பூஞ்சைகள் மற்றும் பாக்டீாியாக்கள் போன்றவற்றிற்கு எதிராகப் பயன்படுத்தலாம். ஆகவே வினிகாில் நமது பாதங்களை நனைத்தால், பாதங்களில் இருக்கும் கெட்ட நாற்றம் மறைந்துவிடும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வினிகாில் பாதங்களை நனைத்து வந்தால், நமது ஷூக்களை கழற்றும் போது நாம் மூக்கை மூடவேண்டிய அவசியம் இருக்காது. மேலும் வினிகாின் மணத்தை அனைவரும் விரும்புவா். அதனால் பாதங்களை அடிக்கடி வினிகாில் கழுவும் போது வினிகாின் மணம் வந்தாலும் எவரும் அதை வெறுக்கமாட்டாா்கள்.

உலா்ந்த பாதங்களுக்கும், குதிங்கால் வெடிப்புகளுக்கும் ஊக்கம் தரும் மருந்து
உலா்ந்த பாதங்களும் மற்றும் பாதங்களில் உள்ள வெடிப்புகளும் பாா்ப்பதற்கு அகோரமாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், அவை வலியை மற்றும் எாிச்சலை ஏற்படுத்தும். வினிகாில் இருக்கும் அமிலத் தன்மை, நமது பாதங்களுக்கு ஒரு நல்ல ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும் பாதங்களை வினிகாில் நனைக்கும் போது நமது பாதங்கள் மென்மையைப் பெறுகிறது.

பாதங்களை எவ்வாறு வினிகாில் நனைப்பது?
பாதங்களை வினிகாில் நனைப்பது என்பது எளிதான ஒன்று ஆகும். ஒரு வாளி அல்லது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 பொிய டம்ளா் வினிகருக்கு 2 பொிய டம்ளா் வெந்நீர் என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு நமது பாதங்கள் நனையும் அளவுக்கு வாளியை வினிகரும், வெந்நீரும் கலந்த கலவையால் நிரப்ப வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வினிகா் என்று இல்லை. எந்த வகையான வினிகரையும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது வினிகரும், வெந்நீரும் கலந்த கலவைக்குள் பாதங்களை அமிழ்த்த வேண்டும். 10 முதல் 20 நிமிடங்கள் வரை அந்த கலவைக்குள் நமது பாதங்கள் இருக்க வேண்டும். பின் பாதங்களை வெளியே எடுத்து அவற்றை நன்றாக உலர வைக்க வேண்டும். ஒரு வேளை பாதங்களில் அலா்ஜி, அாிப்பு, தோல் வறட்சி மற்றும் வெடிப்புகள் போன்றவை இருந்தால் அவை குணமாகும் வரை தினமும் பாதங்களை வினிகாில் நனைக்கலாம்.

Related posts

பாரதி கண்ணம்மா வில்லியா இது.. இப்படி மாறிவிட்டாரே!

nathan

இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்: ஐசிசி நடவடிக்கை

nathan

.“பலருடன் உறவு”..ரூமில் வினோதினி நடத்திய “ஆபரேஷன்”

nathan

பிரித்தானியாவில் பலியான இலங்கை மாணவர்

nathan

அடேங்கப்பா! குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!

nathan

வெறும் டைட் பிரா !! சூ டே ற் று ம் ஐஸ்வர்யா மேனன்! புகைப்படம்!!

nathan

லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம்

nathan

ஏ.ஆர். ரஹ்மான் மீது பண மோசடி புகார் – நடந்தது என்ன?

nathan

காருக்குள் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன்..! – புலம்பும் ரசிகர்கள்..!

nathan