27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
பீனட் பட்டர் குக்கீஸ் / Peanut butter cookies
பிஸ்கட் மற்றும் குக்கீஸ்

பீனட் பட்டர் குக்கீஸ் / Peanut butter cookies

இன்னும் பட்டர்,சர்க்கரை சேர்க்க விரும்பினால் நீண்ட‌ புள்ளிகளுக்கு அப்பாலுள்ள அளவின்படி சேர்க்கலாம்.

தேவையானவை:

மைதா _ 2 கப்
பேகிங் சோடா / Baking soda _ 1/2 டீஸ்பூன்
உப்பு _ 1/4 டீஸ்பூன்

பட்டர் / Unsalted butter _ 1/2 கப் .. ……………..( 3/4 கப்)
ப்ரௌன் சுகர் / Brown sugar _ 1/2 கப்
சர்க்கரை_1/4 கப்……………………… (1/2 கப்)
பீனட் பட்டர் / Crunchy Peanut butter _ 1/2 கப் ………..(3/4 கப்)
முட்டை_1
வென்னிலா எக்ஸ்ராக்ட் / Pure vanilla extract _ ஒரு டீஸ்பூன்

செய்முறை:
cookie4
முதலில் மைதா,பேகிங் சோடா,உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து ஒன்றுக்கு இரண்டு தடவை சலித்துக்கொள்ளவும். அப்போதுதான் பேகிங்சோடா மாவுடன் நன்றாகக் கலந்துகொள்ளும்.

ஒரு பெரிய பௌளில் பட்டரை எடுத்துக்கொண்டு விஸ்க்கால் மென்மையாகும்வரை கலக்கவும்.

அடுத்து இரண்டு விதமான‌ சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

இவை நன்றாகக் கலந்ததும் பீனட் பட்டரை சேர்த்து கலக்கவும்.

பிறகு முட்டை,வென்னிலா எக்ஸ்ராக்ட் சேர்த்து நன்கு கலக்கவும்.

கடைசியாக‌ மைதா கலவையை சேர்த்து நன்றாகக் கலந்து மூடி ஒரு 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

ஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

cookie3

ஒரு baking sheet ல் parchment paperஐ போட்டு மாவில் இருந்து சிறுசிறு உருண்டை அளவிற்கு எடுத்து மென்மையாக உருட்டி படத்தில் உள்ளதுபோல் போதுமான இடைவெளி விட்டு அடுக்கவும்.

ஒரு ஃபோர்க் ஸ்பூனில் சர்க்கரையைத் தொட்டு ஒவ்வொரு உருண்டையின் மீதும் வைத்து லேஸாக அழுத்திவிடவும்.

இதனை முற்சூடு செய்யப்பட்ட ஓவனில் 10 லிருந்து 15 நிமிடங்களுக்கு அல்லது குக்கியின் ஓரங்கள் லேஸாக சிவந்து வரும்வரை பேக் செய்து எடுத்து ஆறவிடவும்.

cookie1

cookie1
இப்போது சுவையான,மொறுமொறுப்பான,இன்னும் என்னல்லாம் பில்டப் கொடுக்க‌லாம்!!,ம்ம்ம்.கரகரப்பான,க்ரன்சியான‌ பீனட்பட்டர் குக்கிகள் தயார்.

Related posts

பீநட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ்

nathan