27 C
Chennai
Thursday, Nov 14, 2024
29 ridge gour
சைவம்

சுவையான பீர்க்கங்காய் மசாலா

மதியம் என்ன சமைப்பதென்றே தெரியவில்லையா? எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் பீர்க்கங்காய் மசாலா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். ஏனெனில் வேர்க்கடலை மற்றும் தேங்காய் சேர்த்திருப்பதால், இந்த பீர்க்கங்காய் மசாலாவானது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

இந்த மசாலாவானது சாதம், சப்பாத்தி போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த பீர்க்கங்காய் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் – 3 (தோல் நீக்கி, பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு…

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்ப – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிது

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

எண்ணெய் – 2 டீஸ்பூன்

வறுத்து, அரைப்பதற்கு…

வேர்க்கடலை – 1/4 கப்

எள் – 1 டீஸ்பூன்

துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் – 1

புளி பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய் மற்றும் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் அதில் எள் சேர்த்து சிறிது நேரம் வறுத்து, பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் புளி சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக் வேண்டும்.

பின் அதில் வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, பின் அதில் பீர்க்கங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

இறுதியில் அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான பீர்க்கங்காய் மசாலா ரெடி!!!

Related posts

எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி

nathan

சுவையான கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

ருசியான… மாங்காய் குழம்பு

nathan

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை

nathan

சேனைக்கிழங்கு அவியல்

nathan

வெண்டைக்காய் அவியல்

nathan

சிம்பிளான… டிபன் சாம்பார்

nathan

காளன்

nathan

கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan