25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
28 bhel puri
இனிப்பு வகைகள்

சுவையான பேல் பூரி ரெசிபி

தெருக்களில் விற்கப்படும் ஸ்நாக்ஸ்களில் ஒன்று தான் பேல் பூரி. இது ஒரு பிரபலமான வட இந்திய ஸ்நாக்ஸ். தற்போது இது இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஸ்நாக்ஸாக உள்ளது. இத்தகைய பேல் பூரியை ஈஸியாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

அதற்கு வேறொன்றும் தேவையில்லை. வீட்டில் பொரி, வெங்காயம், தக்காளி இருந்தாலே போதுமானது. இங்கு அந்த பேல் பூரியின் செய்முறை மற்றும் அதன் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

பொரி – 1 பௌல்

சேவ் – 1 பௌல்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1/2 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

சில்லி தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

சாட் மசாலா – 1 டீஸ்பூன்

ப்ளாக் சால்ட் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு டிபன் பாக்ஸில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, சேவ் மற்றும் பொரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் சாட் மசாலா, ப்ளாக் சால்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சில்லி தக்காளி சாஸ் சேர்த்து, டிபன் பாக்ஸை மூடி நன்கு குலுக்க வேண்டும்.

Related posts

கோதுமை அல்வா

nathan

சுவையான தீபாவளி ஸ்பெஷல் லட்டு செய்ய…!!

nathan

ரசகுல்லா

nathan

சுவையான பால்கோவா…!

nathan

மில்க் ரொபி.

nathan

நாவூறும்… பரங்கிக்காய் அல்வா

nathan

இனிப்பு சக்க பிரதமன்

nathan

தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி

nathan

ப்ரெட் புட்டிங் : செய்முறைகளுடன்…!

nathan