22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
09 1352440288 athirasam
இனிப்பு வகைகள்

அதிரசம் தீபாவளி ரெசிபி

2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு.
சரி அடுத்து என்ன செய்ய வேண்டும்?.
அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.
சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.
சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.
அடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும்.
சாப்ட்டுப் பாருங்க, அதிரசம் அட்டகாசமாக இருக்கும்.
7 கப் (செவன் கப்)
இதுவும் ஒரு ஸ்வீட் ஐட்டம்தான். செய்வது மிக மிக சுலபம். செய்முறைக்குப் போகலாமா?
தேவையான பொருட்கள்
1 கப் பால், 1 கப் தேங்காய்த் துறுவல், 1 கப் நெய், 1 கப் கடலை மாவு, 3 கப் சர்க்கரை. (மொத்தம் 7 கப் வருகிறதா, அதனால்தான் இதற்குப் பெயரே 7 கப்.)
அனைத்தையும் சேர்த்து கடாயில் போட்டு கரண்டியால் மெதுவாக கிண்டி வரவும். நன்கு, மைசூர் பாகு போல வந்ததும் அதை இறக்கி, ஒரு தட்டில் நெய் இறக்கி அதில் இந்த பாகை ஊற்றவும்.
சிறிது நேரம் அப்படியே விடுங்கள். பிறகு இறுகியதும், அதை சதுரம் சதுரமாக எடுத்து பரிமாறலாம்.
தேவையானால் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றையும் சிறிது சிறிதாக கட் செய்து அதைத் தூவியும் சாப்பிடலாம், இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.
அதிரசம் பாரம்பரியப் பலகாரம், செவன் கப் திடீர் பலகாரம். பெரிய அளவில் பொருட்கள் தேவைப்படாது, நினைத்தவுடன் செய்யக் கூடியது. இதையும் செய்து தீபாவளியை மேலும் தித்திப்பாக்குங்கள்
09 1352440288 athirasam

Related posts

பப்பாளி கேசரி

nathan

சுவையான மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி

nathan

பால் ரவா கேசரி

nathan

பைனாப்பிள் – தினை கேசரி

nathan

தேன் மிட்டாய்

nathan

ஓமானி அல்வா

nathan

இட்லி மாவில் சுவையான ஜிலேபி செய்ய தெரியுமா ?

nathan

அன்னாசி – வெந்தயப் பணியாரம்

nathan

காரட்அல்வா /Carrot Halwa

nathan