28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.300.053.800.9
தலைமுடி சிகிச்சை

உங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

பெண்கள் என்றாலே அழகு தான். அதனால் தான் அழகு பராமரிப்பிற்கென்று பெண்கள் நிறைய விஷயங்களை செய்கின்றனர்.

அவற்றில் மிக முக்கியமான ஒன்று கூந்தல். அழகான, மிருதுவான, நீளமான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்பது தான் அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும்.

மாறுபட்ட சூழல், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றின் காரணமாக ஏராளமான கூந்தல் பிரச்சனைகளை பெண்கள், ஆண்கள் என அனைவருமே சந்திக்க நேரிடுகிறது.

ஆங்கில மருத்துவங்களை முயற்சிப்பதற்கு முன்னர் நம் வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்தே கூந்தலை பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சியுங்கள். உண்மையில், கருஞ்சீரகம் முடி உதிர்வு பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வினை பெற்றிட உதவும்.

வீட்டிலேயே கருஞ்சீரக ஹேர் பேக் செய்வது எப்படி?
ஆரோக்கியமான கூந்தலை பெற்றிட வேண்டுமெனில், முறையாக கூந்தலுக்கு ஊட்டமளித்திட வேண்டும்.

அதற்கு இந்த கருஞ்சீரக ஹேர் பேக் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

வீட்டிலேயே சுலபமாக இந்த ஹேர் பேக்கை செய்துவிடலாம்.

வாருங்கள் இப்போது அதனை தெரிந்து கொள்வோம்…
தேவையானப் பொருட்கள்
விளக்கெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
செய்முறை
முதலில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவு கருஞ்சீரகத்தை விளக்கெண்ணெயுடன் சேர்த்து மிதமாக சூடேற்றவும்.

சூடேற்றிய கருஞ்சீரக எண்ணெய் கலவையை ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு அப்படியே ஊற விடவும்.

இப்போது, நறுக்கிய வெங்காயம், கற்றாழை ஜெல் மற்றும் விளக்கெண்ணெயுடன் ஊற வைத்த கருஞ்சீரகம் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

இப்போது கருஞ்சீரக ஹேர் பேக் தயார்.

உபயோகிக்கும் முறை
தயார் செய்த கலவையை, ஸ்கால்ப் மற்றும் முடி முழுவதும் தேய்க்கவும்.
30 நிமிடங்களுக்கு அப்படியே ஊற விடவும்.
பின்னர், மிதமான ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசிடவும்.
வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து செய்து வர நல்ல முன்னேற்றத்தை நீங்களே பார்க்கலாம்.

Related posts

கூந்தல் பராமரிப்பு!

nathan

தலை முழுவதும் பொடுகா? நீங்கள் செய்ய வேண்டியது இப்படித்தான்!!

nathan

வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க..!

nathan

முடி அடர்த்தியாக வளர…. இய‌ற்கை வைத்தியம்

nathan

இளமையிலேயே தலைமுடி நரைக்க முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா…?

nathan

வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!

nathan

இரண்டே மாதங்களில் முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஓர் அற்புத ஹேர் மாஸ்க்!

nathan

உங்களுக்கு சுருட்டை முடி இருந்து, முடி சிக்கல் விழும் பிரச்சினை இருந்தால் சிகைக்காய்…

nathan

சீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும் தெரியுமா!!

nathan