28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
stretch marks
அழகு குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அழகைக் கெடுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க சில எளிய வழிகள்!!!

ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவரின் உடலிலும் நிச்சயம் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் இருக்கும். அதிலும் குறிப்பாக தொடை, இடுப்பு, கணுக்கால் போன்ற இடங்களில் தான் அவை பெரும்பாலும் ஏற்படும். பெண்களுக்கு பிரவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும். இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் சருமத்தின் அழகையே கெடுக்கும். இதனால் எந்த ஒரு உடையையும் நிம்மதியாக அணிய முடியாது. எங்கு ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் தெரிந்து விடுமோ என்ற அச்சத்துடனேயே குட்டையான ஆடைகளை அணிய நேரிடும்.

பலர் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்க க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலரோ இயற்கை வழிகளை நாடுவார்கள். நீங்கள் இயற்கை வழிகளை நாடுபவராக இருந்தால், தமிழ் போல்ட் ஸ்கை ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்கும் ஒருசில இயற்கை வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள். குறிப்பாக இவை அனைத்தும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடியதாக இருக்கும். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் அசிட்டிக் மற்றும் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதனைப் பயன்படுத்தி சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்கலாம். அதற்கு எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் பலமுறை செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை விரைவில் போக்கலாம்.

வெஜிடேபிள் ஆயில் மசாஜ்

பிரசவத்திற்கு பின் சில மாதங்களுக்கு தாய்மார்களை தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு உடல் முழுவதும் மசாஜ் செய்து, சுடுநீரில் குளிக்க சொல்வார்கள். ஏனெனில் இந்த எண்ணெய்களுக்கு சருமத்தில் பிரசவத்தினால் ஏற்பட்ட ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்யும் குணம் உள்ளது. மேலும் இந்த எண்ணெய்கள் சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுத்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். ஆகவே தினமும் இரவில் ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உள்ள இடத்தை நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

முட்டையின் வெள்ளைக் கரு

முட்டையின் வெள்ளைக் கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இவை ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க உதவும். எனவே முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி உலர வைத்து, பின் அவ்விடத்தை கழுவி, ஆலிவ் ஆயிலை தடவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறையும்.

மாய்ஸ்சுரைசர்

சருமத்தை வறட்சி அடையாமல் பார்த்துக் கொண்டால், அதுவே ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்யும். அதற்கு தினமும் சருமத்தை கொக்கோ வெண்ணெய் அல்லது கற்றாழை அல்லது ஆலிவ் ஆயிலுடன் கற்றாழை ஜெல்லை சரிசமமாக கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும்.

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ நிறைந்த எண்ணெய் கொண்டு சருமத்தைப் பராமரிக்கும் போது, அது கொலாஜன் பாதிப்பால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கும். எனவே அதற்கு வைட்டமின் ஈ நிறைந்த எண்ணெயான ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சருமத்தை அன்றாடம் மசாஜ் செய்து வர வேண்டும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் கூட சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்யும். அதற்கு கற்றாழை ஜெல்லை அன்றாடம் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வர நல்ல பலனை விரைவில் காணலாம்.

Related posts

பதற வைக்கும் தகவல்! குழந்தை இல்லாததால் சகோதரனிடம் மனைவியை சீரழிக்கவிட்டு கணவனே வீடியோ எடுத்த அவலம்!

nathan

வறட்சியான சருமத்தை பராமரிக்கும் முறை

nathan

beauty tips.. கரும்புள்ளி பிரச்சனையிலிருந்து நமது மூக்கை பாதுகாப்பது எப்படி?

nathan

Super tips.. முகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு..!

nathan

சின்ன டிப்ஸ்… பெண்களுக்கான சின்ன.. சின்ன அழகு குறிப்புகள்..

nathan

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். …..

sangika

அம்மா, அப்பாவான நயன் – விக்கி… வைரல் ஃபோட்டோஸ்

nathan

உதடுகள் சிவப்பழகை பெற இதை செய்யுங்கள்!…

sangika